வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, November 25, 2011

நாமும் வாழ்த்துவோம் வாருங்கள் எமது தலைவரை







தாகம் தாகம் கடல் சூழ்ந்த இடமெல்லாமே தாகம்
தமிழன் ஆண்டது சொந்த மண்ணை
கதைகளிலும் காவியங்களிலும் கேட்டது மட்டுமே
சுவடுகளும் வரலாறுகளும் உண்மை கூறின
கல் தோன்றி மண் தோன்றா காலங்களில் தமிழ் அன்றாம்
ஒரு பிடி மண் இல்லை தமிழனுக்கு இன்றாம்
தமிழன் உணரவில்லை அன்றும் உண்மையை
வெகுளியாய் நம்பியதால்
தொலைத்தோம் எங்களை

காயங்கள் உடலிலும் உள்ளத்திலும் உறுத்தின பாடாய்
நாட்கள் இல்லை மாதங்கள் இல்லை வருடங்களாய்
ஆங்கிலேயன் சுதந்திரம் தந்து சென்றுவிட்டான்
சிங்களத்துக்கு கை கட்டத்தொடங்கியது தமிழ் இனமே
ஆண்டது சிங்கள கொடிய மிருகங்கள்
வெந்தது தமிழன் தேகங்கள் நித்தமும்
சிங்களம் சீற்றம் கொண்டால் வேகும் தமிழ் உடல்கள்
முட்டி மோதி முதுகெலும்பு உடைத்துக்கொண்டோம்
வேண்டாம் பொல்லாப்பு ஒதுங்கி ஓய்வெடுத்தோம்
விதிகள் சதிகளாக தட்டிச் சென்றன காலங்களாக
குட்ட குட்ட விழுந்தோம் கூனிக் குறுகி நின்றோம்
யாழ் தொடங்கி வவுனியா தாண்டினால் நடிங்கினோம்
நாடி நரம்பு ஒடுங்கி நின்றோம் நாவடைத்து
தமிழன் என்று சொல்லவே பயந்தோம் சொந்த தேசத்தில்
புழுதி எங்கள் உடல்களில் உண்மைகளை விளுங்கிக்கொண்டோம்
நித்தம் வேதனை நிமிர்வில்லா சாதனை
வஞ்சிக்கப்பட்டது தமிழ் இனம் வாஞ்சையாக
ஆண்டவன் கண்ணும் கலங்கியதோ தமிழ் நிலையை பார்த்தோ
கார்த்திகை குளிரில் தான் கருணை பிறந்ததோ ஆண்டவனுக்கும்
சூரிய தேவன் கண்களும் தமிழர் பக்கம் திரும்பியதோ
வல்வெட்டித்துறை மண்ணிலே கடலோசை நாதம் இசைக்க -
இருபத்தாறு கார்த்திகை உதித்தானோ எங்கள் வீரன் மகாவீரன்
பிரபாகரன் பெயர் சொல்லி உயிர்த்தெழுந்தது தமிழர் தேசங்கள்
உலகத்துக்கு தெரியவில்லை தமிழன் யார் என்று புரியவில்லை
காட்டினான் தம்பியாய் மானத் தமிழன் வீரத்தை உலகெங்கும்
திரும்பிப் பார்த்தது தமிழன் என்ற இனம் இருப்பது புரிந்தது
உலகத் தமிழன் இதயங்களில் மானம் காக்கும் தமிழ் தலையானான்
பிரபாகரன் தமிழன் தலைவனானார் தலை நிமிர வைத்தவன் தமிழனை
ஐம்பத்து ஏழாவது அகவை எங்கள் தானத் தலைவனுக்கு
வாழ்த்த மனங்கள் துடிக்கின்றது தலைவன் புன் சிரிப்பை காண மனம் ஏங்குதே
வாழ்த்துகின்றோம் தளவை நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்
தலைவனால் தமிழ் இனமும் வாழட்டும் வாழட்டும் நீடூழி

[கவிஞர் இராஜேந்திரகுமார்]



உங்கள் வாழ்த்துக்களை இதற்க்கு கீழ் பதியுங்கள் உறவுகளே

1 comment:

  1. உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை ... வாழ்க தலைவா எமது இனம் மொழி வாழும் காலம் வரை உமது நினைவுகள் எம்மைவிட்டு அழியாது

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை