வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, November 30, 2011

தமிழன் எனும் கோமாளி!

ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது
ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும்.அனைத்து தளங்களிலும் விவாதங்கள்
நடந்து முடிந்து விட்டன.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்று தமிழ் பரப்பை
ஒரு மோசமான நோய் பீடித்துகொண்டுள்ளதை  அறிய முடிகிறது .
அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய்.அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும்
ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய்

அதுவும் தனக்கு ஆதரவான கருத்தென்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கருதுவது
மட்டும் அல்லாமல் அப்படி ஒரு தோற்றத்தை மற்றவருக்கும் உருவாக்குவது.
முன்பு அரசியல் வாதிகளை மட்டும் பாதித்த இந்த நோய் இப்போது படித்தவர்கள்,
படிக்காதவர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள்,உட்பட போது மக்களையும் விட்டுவைக்கவில்லை.


இதனால் எது நடுநிலையானது எது அரசியல் சாயம் உள்ளது என்று இனம்காண முடியாத அளவிற்கு
அனைவரும் குழம்பிபோய் உள்ளனர்.வழக்கம் போல அரசியல் வாதிகள் இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர்.
தமிழை படி என்றால் ஆங்கிலம் தெரியாமல் இந்த நவீன உலகத்தில் என்னசெய்ய முடியும் என்கிறார்கள்.
ஈழத்தமிழர்களின் அவலத்தை எழுதினால் விடுதலை புலிகளின் ஆதரவாளர்களா என்கிறார்கள்.ஈழத்தமிழர் விடையத்தில்
கருணாநிதி செய்தது சரியில்லை என்றால் ஜெயலேலித இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
யூதர்களை நாசிக்கள் கொன்றதை உலகின் பேரவலம் என்று விபரிக்கின்ற புத்தகங்கள் தமிழில் பல உண்டு .
அனால் கூப்பிடும் துரத்தில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி தினசரி செய்தித்தாள்கள் கூட எழுதவில்லை.இவையெல்லாம் இந்த
நோய்ப் பாதிப்பின் வெளிப்பாடுதான்.தமிழை படி என்றால் ஆங்கிலம் படிக்காதே என்று பொருள் கொள்ளுவதை நோயைத் தவிர
வேறு என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.



தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விவாதங்களுக்கும் இன்று இதே நிலைதான்.இன்றைய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவையா என்றால் செம்மொழி ஆவதற்காக தமிழுக்கு உள்ள தகுதிகளையும்,தமிழ் செம்மொழி அமைப்பின் செயற்பாடுகளையும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.
பெட்னா தமிழ் விழா கொண்டாடும்போது தமிழக அரசு செம் மொழி மாநாடு கொண்டாட கூடாத?என்கிறார்கள்.பெட்னாவையும் தமிழக அரசையும்
ஒன்றொன்று பார்கின்ற நிலையை நோய்யேன்பதை தவிர வேறென்னவென்று சொல்லுவது.திடீரென இரண்டாயிரத்து பத்தில்தான் தமிழ்
செம்மொழி நிலையை அடைந்து விட்டது போல பேசுகின்றார்கள்.எதோ தமிழுக்கு செம்மொழி நிலையை கருணாநிதி மத்திய அரசிடம் போராடி
வாங்கி தந்தது போன்று அவரை கொண்டாடுகின்றனர்.(அமைச்சர் பதவியை பேரம் பேசி வாங்குவது போல்).உண்மையில் இவர்கள் சொன்னாலும்
சொல்லாமல் போனாலும் கொண்டாடினாலும் கொண்டாடாமல் போனாலும் மத்திய அரசு அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காமல் போனாலும் தமிழ்
செம்மொழிதான்.தமிழன் செம்மொழி தகுதியை யாரும் தட்டி பறிக்கவோ,மறுக்கவோ முடியாது.




மேலும் தமிழ் மொழியின் தன்மையை அங்கீகரிக்கும் தகுதி கூட வேறு எந்த மொழியை சார்ந்தவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் தமிழ் செம்மொழி ஆனதை யாருக்காக கொண்டாடுகின்றோம்.நமக்காகவா?அடுத்தவருக்காகவா?நமக்காக என்றால் அதை கொண்டாடும் தகுதி எமக்கு இருக்கிறதா?நமது சொந்த தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதுகின்ற நாம் நமது மொழியை செம்மொழி என்று கொண்டாடுவதற்கு தகுதி உள்ளவர்களா? உண்மையில் நாம் யார்?

!தமது கையெழுத்தை கூட தமிழில் போடாதவர்கள்!

!தமது குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதை அநாகரீகமாக கருதுபவர்கள்!

!தமது நிறுவனத்துக்கு கூட தமிழ் பெயர் வைக்காதவர்கள்!

!வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதை கவுரவமாக கருதுபவர்கள்!

!தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் பெயரை தமிழிலும் எழுதும் விநோதப்பிறவிகள்!

!கடன் வாங்கி படிக்கவைத்தாலும் ஆங்கிலவழி பள்ளியில்தான் பிள்ளைகளை சேர்ப்பேன் என்று அலைபவர்கள்!



இப்படிபட்ட நாம் தமிழை கொண்டாடுவதில் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா?இப்படி மாநாடு போட்டு கொண்டாடுவதால்
மட்டும் தமிழை அடுத்தவர்கள் கற்க முன்வந்து விடுவார்களா?நாமே நம் தாய் மொழியை அங்கீகரிக்காத போது மற்றவர்கள் அங்கீகரித்து
என்ன பயன்?தமிழை கற்க வேண்டியவர்கள் நாமா?அடுத்தவர்களா?மாநாட்டுக்கு பெருமளவான மக்கள் கூட்டம் வந்ததாம்.ஆதனால் தமிழ் பற்று
வளர்ந்து விட்டதாம்.மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக இருந்தது? அறுதியிட்டு சொல்லுங்கள் ஆய்வரங்கத்தில ?உணவகத்திலா?தீவுத்திடல் சுற்றுல
பொருட்காட்சிக்கு கூட ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள்.கூட்டம் கூட்டுவதே பெருமையாகிவிடுமா?கொண்டாடுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் இருந்து வந்த ஒரு மடல்.எழுதியவர் விபரம் இருக்கவில்லை தரமாக உள்ளதால் பிரசுரிக்கிறோம் ஆ-ர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கு வருகைதரும் உறவுகளே இந்த இணையத்தை உங்கள் நண்பர்களிடம் கொண்டு சேருங்கள் ...இங்கு இடப்படும் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..உங்கள் விமர்சனம் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..ஆகையால் உங்கள் கருத்துக்களை எதிர்பாக்கிறேன் ..மேலும் உங்கள் தமிழ், ஈழம் ,தமிழர்கள் பற்றிய கட்டுரைகள் எமக்கு அனுப்புங்கள் ..

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை