சிறிலங்காவில் நடைபெற்ற இனப்போரின் இறுதி நாட்கள் உலகில் எங்கும் நடைபெறாத மிகப் பெரும் அழிவுகளுடன் (2009 ) மே மாதம் நிறைவடைந்திருந்தது.அதிக தொழில் நுட்ப வளர்ச்சியை கண்டிருந்த உலகம் அங்கு நடைபெற்ற சம்பவங்களை செய்மதி ஊடாக நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தன.இறுதிக்கட்ட சமரில் சிறிலங்கா இராணுவம் தன்னால் பிரகரடனப் படுத்தபட்ட பாதுகாப்பு வலையங்கள் மீதும்,இடம்பெயர்ந்து தாக்குதலில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலைகள் மீதும் வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்தியிருந்தது.அதற்க்கான செய்மதி ஒளிப்படங்களும் உள்ளன.
அது மட்டுமல்லாது இறுதி நாட்களில் சரணடைய முற்பட்ட ஏராளமான போராளிகளும்,தலைவர்களும்,சுட்டு கொல்லபட்டனர்.ஏறத்தாள (25.000 )
மக்கள் இறுதி நாட்களில் கொல்லபட்டதாக சிறிலங்காவில் பணிபுரிந்த தொண்டர் நிறுவனங்கள் ஐநாவுக்கு தகவல் அனுப்பியிருந்தன.எனினும் அதனை வெளியிட ஐநா முன்வரவில்லை.இனப்படுகொலைகள் நடை பெற்ற செய்மதி ஒளிப்பட சான்றுகளும் வழங்கபட்டன ஆனாலும் ஐநா மவுனமாகவே இருந்தது.சாட்சியங்களை தேடி வருவதுபோல பாசாங்கு செய்த ஐநாவின் செயலாளர் நாயகத்துக்கு விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு ,பா .நடேசன் அவர்கள் முக்கிய சான்றுகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு மரணத்தை தழுவியிருந்தார்.அதாவது அவர் போராளிகளுடனும் குடும்பாத்தருடனும் சரணடைவதற்கு முன்னர் சரணடைவது தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர்களுடனும்,கொழும்பில் உள்ள வெளிநாட்டு துதரகங்களுடனும்,இந்திய அதிகாரிகளுடனும்,விஜய் நம்பியார் போன்ற ஐநா அதிகாரிகளுடனும்,தமிழ் தேசிய கூட்டமைப்புடனும்,அனைத்துலக உடகங்களை சேர்ந்த உடகவியலாலர்களுடனும்,சரணடைவது குறித்தும் எவ்வாறு சரணடைவது தொடர்பான விளக்கங்களை பெறுமே சரணடைந்து இருந்தனர்.
மக்கள் இறுதி நாட்களில் கொல்லபட்டதாக சிறிலங்காவில் பணிபுரிந்த தொண்டர் நிறுவனங்கள் ஐநாவுக்கு தகவல் அனுப்பியிருந்தன.எனினும் அதனை வெளியிட ஐநா முன்வரவில்லை.இனப்படுகொலைகள் நடை பெற்ற செய்மதி ஒளிப்பட சான்றுகளும் வழங்கபட்டன ஆனாலும் ஐநா மவுனமாகவே இருந்தது.சாட்சியங்களை தேடி வருவதுபோல பாசாங்கு செய்த ஐநாவின் செயலாளர் நாயகத்துக்கு விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திரு ,பா .நடேசன் அவர்கள் முக்கிய சான்றுகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு மரணத்தை தழுவியிருந்தார்.அதாவது அவர் போராளிகளுடனும் குடும்பாத்தருடனும் சரணடைவதற்கு முன்னர் சரணடைவது தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர்களுடனும்,கொழும்பில் உள்ள வெளிநாட்டு துதரகங்களுடனும்,இந்திய அதிகாரிகளுடனும்,விஜய் நம்பியார் போன்ற ஐநா அதிகாரிகளுடனும்,தமிழ் தேசிய கூட்டமைப்புடனும்,அனைத்துலக உடகங்களை சேர்ந்த உடகவியலாலர்களுடனும்,சரணடைவது குறித்தும் எவ்வாறு சரணடைவது தொடர்பான விளக்கங்களை பெறுமே சரணடைந்து இருந்தனர்.
சிறிலங்கா இராணுவமும் அதனுடன் இணைந்துள்ள துணை இராணுவ குழுக்களும் தன்னை படுகொலை செய்யும் என்பதை முன் கூட்டியே அறிந்த போதும் தனது மரணம் சிங்கள பேரினவாதத்தையும் அவர்களுக்கு துணைபுரியும் துரோகக் கும்பலையும் உலகின் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதுக்காகவே திரு நடேசனும் ,புலித்தேவனும் ,தமது இறுதியான மணித்துளிகளை பயன்படுத்தி இருந்தனர்.அவர்களது உரையாடல்கள் எல்லோரிடமும் பதியப்பட்ட ஆவணங்களாக உள்ளன.இதனை அமெரிக்க முன்னாள் முன்னாள் துதுவர் றொபேட் ஒ பிளாக் ஒப்புகொண்டிருந்தார்.எனினும் ஐநா காத்திரமான செயற்திட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை.
அதன் பின்னர் ஜனநாயகத்துக்கான உடகவியலாளர்கள் என்ற அமைப்பு தமிழ் மக்கள் எவ்வாறு கொடூரமாக கொல்லபடுகின்றனர் என்பதுக்கான ஆதாரத்தை ஒரு இராணுவ சிப்பாயிடம் இருந்து பெற்று வெளியிட்டு இருந்தது.அதுதான் பிரித்தானிய சனல் (4 )தொலைக்காட்ச்சி நிறுவனம் ஒலிபரப்பு செய்த காணொளி காட்சி.உலகில் உள்ள மனித மனங்களை ஒரு கணம் உறையவைத்த அந்த காட்சி தொடர்பில் ஐநா காத்திரமான நகர்வை மேற்கொள்ளவில்லை.எனினும் அதன் முத்த அதிகாரியான ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான படுகொலைக்கு எதிரான சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தனது தனிபட்ட முயற்ச்சியின் உடாக அந்த காணொளியை உண்மையானது என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
அது பொய்யானது என்பதை உறுதிபடுத்தி சிறிலங்கா அரசு தப்பிப்பதுக்கான கால அவகாசத்தை ஐநா வழங்கியபோதும்.அல்ஸ்ரனின் நடவடிக்கை அதனை முறியடித்துள்ளது.அல்ஸ்ரன் அதனை ஐநாவிடம் சமர்ப்பித்து இருந்தால் (25.000 ) மக்கள் கொல்லபட்டதாக அனுப்பப்பட்ட தகவல்கள் எவ்வாறு ஐநா அலுவலகத்து பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறதோ அதனைப் போல இதுவும் வெளிவராமல் முடங்கி போகலாம் என்று அன்சியதனால்தனே என்னவோ அவர் தானே நேரடியாக உடகங்களுக்கு வழங்கியுள்ளார்.அவரின் அறிக்கை சிறிலங்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.அனால் பல அறிக்கைகளை சிறிலங்கா அரசு வெளியிட்டு வருகின்றது.எனினும் அல்ஸ்ரனின் அறிக்கை தொடர்பில் ஐநா செயலாளர் நாயகத்தின் பதில் என்ன?என்பதே பலரினது எதிர்பர்ப்புக்களாக இருந்தது.அனால் ஐநா செயலாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாது.உலகில் மதிதபிமானம் சிந்தனைகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அதாவது அல்ஸ்ரனின் அறிக்கை தனிப்பட்ட கருத்து என்பதை கூறி சிறிலங்கா அரசை காப்பற்ற முனைந்துள்ளார் பான் கீ மூன்.
அதாவது இனப்படுகொலை தொடர்பாக மீண்டும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கபடுள்ள போதும் அதனை ஐநாவின் செயலாளர் நாயகம் முக்கியமானதாக கருத முன்வரவில்லை.அதனுடன் தொடர்பற்ற விடையங்களை அவர் பேசுகின்றார் .மகிந்தவின் உறுதிமொழிகளை பேசுகின்றார்.மீள் குடியேற்றம் தொடர்பாக பேசுகின்றார்,கையில் கிடைத்த ஆவணங்கள் விடுத்து வேறு ஆவணங்கள் தேடுகின்றார்.பான் கீ மூனின் இந்த நடவடிக்கைகள் பல சந்தேகங்களையும்,கேள்விகளையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.அதாவது வன்னியில் நடைபெற்ற நீதிக்கு புறம்பான படுகொலைகள் பான் கீ முன்னுக்கு முன் கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தத?
அவரின் அனுசரணையுடன் தான் படுகொலைகள் மேற்கொள்ளபட்டதா?இந்திய அரசின் மேற்பார்வையில் மேற்கொள்ளபட்ட படுகொலைகளுக்கு ஆதரவாக இருந்த ஐநாவின் அதிகாரியான விஜய் நம்பியாரை பான் கீ மூன் காப்பற்ற முனைகிறாரா?ஆசிய பிராந்திய வல்லரசுகளின் வட்டத்துக்கும் மூன் முடங்கி விட்டதா?கினிய பகுதியில் (157 ) படுகொலை செய்யபட்டபோது விசாரணைக்குழுவை அமைத்துள்ள பான் கீ மூன் ,ஏன் சிறிலங்காவில் பல ஆயிரம் மக்கள் ஆதரங்களுடன் படுகொலை செய்யபட்ட போதும் மவுனம் காத்து வருகிறார்.மேற் கூறப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் கிடைக்க வேண்டுமானால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அழுத்தங்கள் முழு வீச்சுடன் ஐநாவை நோக்கி திருப்பபட வேண்டும்.
ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி கினிய பகுதியில் மேற்கொள்ளபட்ட படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்த பிரான்ஸ்,போன்ற நாடுகள் ஏன் சிறிலங்கா விடையத்தில் அதிக அழுத்தங்கள் கொடுக்கவில்லை என்பதுக்கான விடையையும் நாம் கண்டறிய முற்பட வேண்டும்.மூனின் இரண்டாவது பதவிக்கான வாய்ப்பை விரும்பாத பிரித்தானிய,அமெரிக்க,பிரான்ஸ் ,போன்ற நாடுகள் அவரை ஒரு அழுத்தத்திற்கு கொண்டுவந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளன.எனினும் இந்த சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் ஐநாவின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவதன் முலம் சிறிலாங்காவின் தமிழ் இனம் சந்தித்த கொடூரமான இனப்படுகொலைகளை உலகின் மூன் நிறுத்தி எமது உரிமைகளின் அவசியத்தை வெளிப்படுத்த முடியும்.அதனை நாம் விரைவாகவும் பெருமெடுப்பில் மேற்கொள்ள வேண்டும் என்பதே எம்முள் உள்ள அவசர பணியாகும்.
நன்றி-
வேல்ஸ் இல் இருந்து அருஷ்உறவுகளே நாம் இன்று ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.எமது மண்ணில் நடந்த நீதிக்கு புறம்பான படுகொலைகள் எல்லாம் இன்று சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது ,இன்று நான் எமது ஈழத்தில் படுகொலை செய்யபட்ட மக்களுக்காக நீதி வேண்டி போராடுவது எமது காலத்தின் கட்டாயம் ..உறவுகளே உலக நாடுகளின் கதவுகளை தட்டுங்கள் புலம்பெயர் மக்களே எமது மக்களுக்கு நீதி வேண்டி கொடுங்கள் ..இந்த கடமை புலம்பெயர் மக்களாகிய உங்களிடமே ஒப்படைக்க பட்டுள்ளது
No comments:
Post a Comment