வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, November 17, 2011

சிறிலங்காவின் சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை எப்போது?

கடந்த ஆறு சதாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமை போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லபட்டும் நாற்பது ஆயிரத்துக்கும் மேலான மக்கள் காணமல் போயும்,ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஊனமுற்றும் ,ஆயிர கணக்கில் தமிழ் பெண்கள் சிங்கள அரச படையால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டும்,பலகோடி பெறுமதியான சொத்துக்கள் நசமாக்கபட்டும் உள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டு உள்ளன.இதேவேளை முன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலும்,ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர் .இதே வேளை பல நாடுகளின்
உதவியுடன் நடந்து முடிந்த சிறிலங்காவின் ஈவிரக்கமற்ற நடவடிக்கை ,இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் ,மாற்றங்கள்,ஏமாற்றங்கள் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லையென நம்புகின்றேன்.

 இம்முள்ளிவய்க்கால் நடவடிக்கை சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்கள் முன் கூட்டியே நடத்துவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் ,இம்முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு ஆணை பிறப்பித்தவரும்,அவ் ஆணையை நிறைவேற்ரியவரும் ,போட்டியில் இறங்கி ஆணை பிறப்பித்தவரும் சிறிலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியும் கொண்டார்.வெற்றி தோல்விகளின் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க,ஏற்கனவே நான்கு ஆண்டுகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மேலும் ஆறு ஆண்டுகளோ பதவியில் இருக்க தகுதி உடையவராகின்றார்

 **சர்வதேசம் முள்ளிவாய்க்கால்**
இந்த வகையில் சர்வதேச ரீதியான ஜெனநாயக நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளவிருக்கும்.*சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை குறித்து ஆராய்வது மிக அவசியம் .இதுவொரு இரகசியமான திட்டமோ நடவடிக்கையோ அல்ல.வன்னி மக்கள் மீதான முல்லிவாய்க்கள் நடவடிக்கைகள் என்று முடிவடைந்ததோ அன்றிலிருந்து சிறிலங்காவின் ஜனாதிபதி முதல் ,பிரதமர் ,அமைச்சர்கள் ,அரசின் முக்கிய பேச்சாளர்கள் எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென கங்கணம் கட்டியுள்ளனர்.சிறிலங்கா அரசு வெளிப்படையாக கூறிவரும் ,சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கைகளில் வெற்றி பெறுவார்களா?அல்லது தோல்வியை தழுவி கொள்ளுவார்களா?என்பது சர்வதேச ரீதியான ஜெனநாயக அரசுகளின் கைகளில் மட்டுமல்ல ,இவ்விடையம் முழுக்க முழுக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது.இதற்க்கு இராஜதந்திர அணுகுமுறை மிகவும் அவசியம்...

 **இராஜதந்திரம் **

முதலில் இராஜதந்திரம் என்றால் என்ன ?மதிநுட்பத்துடன் கூடிய பரிமாற்றம் ,விட்டுகொடுப்பு ஆகியவற்றுடன் உணர்ச்சிவசம்ற அணுகுமுறை ,இராஜததிரமான அணுகுமுறையின் போது மிக நீண்ட எதிர்காலத்தை மனதில் கொள்வார்கள்.இவ் இராஜதந்திர அணுகுமுறையினால் சிறிலங்கா அரசு சர்வதேச ரீதியாக ஏற்கனவே பல அரசாங்கங்களை அணுகி நல்ல பலனை அடைந்து வருகின்றது.அனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எந்த அரசின் தயவுமின்றி எமக்குள்ளையே தொடர்ந்து வீராப்பு பேசுவது புத்தியான விடையமல்ல.புலம்பெயர் வாழ் மக்கள் முதலில் சிறிலங்கா அரசின் சர்வதேச ரீதியான சூழ்ச்சி வலைகளை சரியான வகையில் புரிந்துகொள்ளுதல் வேண்டும் .அடுத்து இதற்க்கு பரிகாரம் காண்பதற்கு யாரை அணுகலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.


**சிறிலங்காவின் திட்டம்**

சிறிலங்கா அரசின் சர்வதேச ரீதியான கபடத்தனமான திட்டங்களை,அதவாது சர்வதேச முள்ளிவாய்க்கால் நாம் மிகசுலோபமான கணிப்பிடலாம்.--முதலாவதாக ..இலங்கையில் தாம் மேற்கொள்ளும் மனித உரிமை,அரசியல் மனிதாபிமான செயல்திட்டங்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்களில் குரல்கொடுப்போரை ஒரு சட்ட வலையினுள் அகப்பட வைக்கும் மாபெரும் திட்டத்தை கொண்டுள்ளனர்.அதாவது குறிப்பிட்ட வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் சட்டங்களை தவறி நடப்பதாக கூறி உண்மைக்கு புறம்பான தகவல்களை சிறிலங்கா அரசே உற்பத்தி செய்து குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கு கொடுத்து ,அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி துண்டுவது.

--இரண்டாவதாக--சர்வதேச ரீதியான மனித உரிமை மனிதாபிமான அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளும் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் தமிழ் கூலிப்படைகள் முலமாக வன்முறையை துண்டுவது.இத்திட்டத்திற்கு உடந்தையாக செயற்படுவதேற்கென ஏற்கனவே பல நாடுகளுக்கு சிறிலங்காவின் இராணுவ உயர் அதிகாரிகள் தூதுவர்களாக நியமிக்க பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிட தக்கது .
--முன்றாவதாக--ஏற்கனவே சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக வேளை செய்யும் தமிழ் அமைச்சர்கள் ,உயர் பாதுகாப்பு அதிகாரிகள் ,அரசியல் புள்ளிகள் போன்றோர் தற்போதைய அரசுடன் அதிருப்தி அடைந்ததுபோல் பாசாங்கு செய்து இயலுமானால் பதவிவிலகுவதன் முலம் புலம்பெயர் செயற்பாடுகளுக்குள் நுழைந்து அவற்றை அழிப்பதுக்கான வழிகளை தேடுவது போன்ற பல திட்டங்களை கொண்டுள்ளனர்.

--மனித உரிமை,மனிதாபிமான அரசியல் செயற்ப்பாட்டளர்கள்--
இவ்விதமான சூழ்ச்சி வலைகளை சிறிலங்கா அரசு கொண்டிருக்கும் வேளையில் ,புலம்பெயர் வாழ் மனித உரிமை ,மனிதாபிமான ,அரசியல் செயற்பாடுகளின் நடவடிக்கை எப்படியாக இருக்க முடியும் ?

--முதலாவதாக--புலம்பெயர் வாழ் தமிழர் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் .விசேடமாக உடகத்துறையில் சம்மந்தபட்டோர் தாம் வாழும் நாடுகளில் உள்ள எழுத்து சுகந்திரத்தை ஆங்கிலத்திலையோ தமிழிலையோ துஸ்பிரயோகம் செய்தால் பல எதிர் விளைவுகள் ஏற்படலாம் ..
---இரண்டாவதாக---மனித உரிமை மனிதாபிமான அரசியல் செயற்பாட்டாளர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களான மனித உரிமை,மனிதாபிமானம் ,சமைய ரீதியான அமைப்புக்களுடன் நெருங்கிய நட்புக்களை தேடிகொள்வதுடன்,அந்த நாடுகளில் உள்ள கல்விமான்கள் ,அரசியல் கட்சிகளுடன் நெருங்கி வெலை செய்யவேண்டும்.அத்துடன் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுடைய வெளிநாட்டு பணிப்பாளர்களுடன்,அதிகாரிகளுடன் நட்பை வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.முடியுமானால் அந்த நாட்டு அமைச்சர்கள் ,நாடளமன்ற உறுப்பினர்கள் ,அரச தலைவர்களுடன் நட்பை தேடிக்கொள்ளலாம்.இதில் குறிப்பாக திடீரென ஏற்படும் சந்தேகத்துக்கு குரிய சில புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தொடர்பில் ,நட்பில் அவதானமாக இருக்க வேண்டும் .காரணம் எந்த புற்றில் எந்த பாம்பு உள்ளது என்பதை இந்த காலகட்டத்தில் அறிந்துகொள்ள முடியாதுள்ளது.ஆகையால மேற் கூறப்பட்ட விடையங்கள் போன்ற பல எதிர்பாராத விடையங்களில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க தவறும் பட்சத்தில் ,சிறிலங்கா திட்டமிடும் *சர்வதேச முள்ளிவாய்க்கால் நடவடிக்கை மிக இலகுவாக நிறைவேறும்.

 --கையை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது --
இன்றைய காலகட்டத்தில் இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் வாழ்பவர்களாக இருந்தாலென்ன ,புலம்பெயர் வாழ் தமிழர்களாக இருந்தாலென்ன ,சகலரும் கடந்த முன்று சாதப்த்த யுத்தத்தினால் எதோ ஒரு விதத்தில் பாதிக்கபட்டுள்ளனர் ,பலர் உடன்பிறப்புக்களை இழந்துள்ளனர் சிலர் உறவினர்களை இழந்துள்ளனர் ,யாவரும் சொத்துக்களையும் இழந்து சிலர் மனநோயாளிகளாகவும் உள்ளனர்.இவ் இன அழிப்பை கைகட்டி வேடிக்கை பார்க்க விரும்பாத புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக நியாயம் கேட்க்கும் வேளையில் சிறிலங்கா அரசு மிக இலகுவாக இச செயற்பாடுகளுக்கு பயங்கர வாத முத்திரை குத்தி தமிழ் மக்களை தனிமை கொள்ள செய்கிறார்கள்.உலகின் முக்கிய புள்ளிகள்,சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்,ஐநா மனித உரிமையாளர் ஆகியோர் சிறிலங்கா நடாத்தி முடித்துக்க போர் குற்றங்களை விசாரிக்க வேண்டுமென கூறும் இவ்வேளையில் ,சிறிலங்கா இவ்வேண்டுகோளை மறுத்தும் வருகிறது.இவற்றின் சிறிலங்கா அரசினுடைய பொருளாதாக அரசியல் கொள்கை மட்டும் காரணியாக இல்லாது சில நாடுகளின் முக்கிய புள்ளிகளுடனான சிறிலங்கா அரசின் தனிப்பட்ட நடப்பும் காரணியாக அமைகிறது .

 அப்படியானால் தமிழ் மக்கள் இலங்கைதீவில் மட்டுமல்லாது ,சர்வதேச ரீதியாகவும் அழிந்து போக வேண்டியதுதான ??
இந்த வேளையில் சிறிலங்கா அரசு தாமாக ஏற்றுகொண்ட சர்வதேச சட்டங்களை மீறுகிறார்கள் என ,சுட்டி கட்டுவது, குரல் கொடுப்பது ,ஒவ்வொரு மனித உரிமை செயற்பாட்டினர் மனிதநேய பணிப்பாளர்களின் முக்கிய கடமையாகும்.இவற்றை யாரும் எந்த நாட்டுடைய சட்ட ஒழுங்கை மீறுவதாக குற்றம் சாட்ட முடியாது ...

நன்றி -ச,வி.கிருபாகரன்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை