வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, November 4, 2011

வரவிருக்கும் நவம்பர் 27தரவிருக்கும் தகவல் எதிர்பார்ப்புக்கள் என்னவாகும்

 ஒவ்வொரு வருடமும் நவம்பர் (27  ) ஆம் நாள் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் தாயாக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனித கல்லறைகளில் .சிரம் தாழ்த்தி ,மலர்துவி ,ஒளியேற்றும் உன்னத நாள் ,நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள் நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சிய கனவினை ஈடேற்ற அவர்கள் வழிச்சுவட்டினை தொடர்வோம்.என உறுதியெடுத்து கொள்ளும் வீர நாள் ,ஈழ தமிழர்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பினை கொடுக்கும் நாள்.? அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரின் உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அறிய நாள் .அன்நாளில் ஒட்டுமொத்த உலகமே தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும்.அனால் இந்த வருடன் தேசியத்தலைவரின்
உரையில் என்ன விடையம் இருக்கும் என்பதை விட .தேசிய தலைவர் அதி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவார ?இல்லையா ? என்ற கேள்வியுடன் கூடிய எதிர்பார்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகிறது.

கடந்த மே மாதம் ( 17 ) ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயர சம்பவங்களின் பிற்பாடு தேசிய தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான தெளிவான பதிலும் கிடைக்கவில்லை.அன்றைய சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்களால் கூட எதையும் உறுதியாக கூறமுடியாத    அளவிற்கு இப்பொழுதும் அந்த விடையம் மர்மமாகவே தொடர்கின்றது.இந்த நிலையிலையே இம்முறை தலைவர் அவர்களால் வருடம்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர் தின உரை நிகழ்த்தபடும?என்ற கேள்வி எழுந்துள்ளது.தலைவர் இருக்கிறாரா? இல்லையா?என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை ,.தமது மாண்புமிகு தலைவரின் மீள் வரவுக்காக ? மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமே எதிர் பார்த்து காத்து இருக்கின்றது.

எதிர்பர்புக்கள் நம்பிக்கைகள் .எதிர் பார்க்க படுபவையே இன்றி .உறுதியாக கூற   முடியாதவை.அந்தவகையில் எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் மாவீரர் உரை நிகழ்த்தபடுமா என்பது உறுதியாக கூற முடியாத  விடையமாகவே காணப்படுகின்றது.இந்த விடையம் இப்படியே இருக்க தலைவரின் உரை நிகழ்த்தபட்டால் .அல்லது நிகழ்த்த படாவிட்டால் .என்ற இரு நிலைமைகளை பற்றியும்   .அதனாலான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவசியம் ஆராயவேண்டி உள்ளது.தேசிய தலைவர் தோன்றி தனது உரையை நிகழ்த்துவாரனால்..தமிழர்களுக்கு அதைபோன்றதொரு மிக மகிழ்ச்சியான விடையம் வேறெதுவும் இருக்க முடியாது.இவளவு நாட்களால் மனமுடைந்து சோர்ந்து போயிருந்த அனைவரையும் அதன் பின் மீள எழுச்சிகொள்ள வைப்பதாக அமையும்.ஒட்டுமொத்த தமிழர்களும் புத்துணர்ச்சியோடு தலைவரின் பின் அணிவகுத்து நிக்க தயாராவார்கள்.தலைவன் வழிநின்று அடுத்தகட்ட விடுதலை போராட்டங்களை மிக எழுச்சியோடு தொடர முனைவார்கள்.சிங்கள தேசத்திற்கு அது கலக்கத்தினை தோற்றுவிக்கலாம்.சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தை தோற்றுவிக்கலாம்.ஈழவிடுதலை போராட்டம் மீண்டும் முன்னேற்றகரமான பரிமாண மாற்றத்தினை பெறலாம்.இவையெல்லாம் தமிழீழ தேசிய தலைவர் மீண்டும் தோன்றினால் சாத்தியபடக்குடிய விடையங்களாக அமைய  கூடியவை.

அனால் எதிர்மாறாக வரவிருக்கும் மாவீரர் தினத்தன்று தலைவர் தோன்றவில்லையாயின் தற்போது மனம் தளராது  இருக்கும் பலரும் மனமுடைந்து சோர்வடைந்து போகக்கூடிய பாதகமான சாத்திய கூறுகளும் கனபடுகின்றன.கடந்த (17  ) தொடக்கி இன்றுவரை தொடரும் மர்மமான கேள்விகளுக்கு தாமாகவே பதில்களை கண்டுகொள்ள எத்தனிப்பார்கள் .தலைவர் வருவார் என்ற நம்பிக்கையில் பார்த்துகொண்டு இருந்தவர்களுக்கு அந்த ஏமாற்றம் பெரும் மனமுடைவினை கொடுக்கலாம்.இதன் காரணமாக வரும்காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் மக்கள் போராட்டங்களில் ஒரு தொய்வு நிலை கூட தோன்றலாம்.பல தரப்பினாலும் புலிகளின் தலைவர் இல்லை என்ற முடிவுகள் எடுக்க படலாம் .இது இந்தியாவில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை உண்டுபன்னகூடிய சாத்தியககூறுகளும் காணப்படுகின்றது.இவ்வாறாக பல பாதகமான விளைவுகள் தலைவர் அவர்கள் தோன்றாத விடயத்தில் ஏற்படகூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.மொத்தத்தில் வரவிருக்கும் மாவீரர் தினத்தில் தேசிய தலைவர் தோன்றி உரைநிகழ்த்த வேண்டும் என்பதே எல்லோருடைய  விருப்பமாக உணர முடிகிறது.

மேலோட்டமாக பார்க்கும் போது அதனாலான விளைவுகளை மேலோட்டமாக  நேக்கும் போது .தேசியத்தலைவர் தோன்றினால் மேலே குறிப்பிட்டதை போன்று .அனைத்து விதத்திலும் நன்மைகளே  என்று தோன்றலாம்.அனால் நாம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் .அதாவது இன்றைய நிலையில் தலைவர் அவர்கள் தோன்றுவதற்கான  சுழல்கள் உருவாகவில்லை.என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை அறிந்திருக்கும் ,அவர்கள் போராட்டம் நியாயமானது என்பதனை உணர்ந்திருக்கும் சர்வதேசம் .தமிழர்களின் தாயாக விடுதலை போராட்டம் சிதைக்க படுவதற்கு சிங்களத்திற்கு தனது முழுமையான ஆதரவினை கொடுத்திருந்தது.ஏனெனில் தமிழர்களுக்காக போராடிய புலிகளை சர்வதேசம் அச்சதுடனையே  நோக்கியது.அவர்களின் அபரீதமான வளர்ச்சியும்.செயற்திறனும் ,கட்டமைப்புகளும்,அவர்களை அச்சம் கொள்ள  வைத்தன.அத்தோடு நாடுகளுக்கு உள்ளேயான பிராந்திய வல்லாதிக்கம் .மற்றும் வர்த்தக போட்டிகளும் சேர்ந்து கொண்டன,இவற்றின் காரணமாகவே ,புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி தடைகளை விதித்து .அவர்களை அழிப்பதற்குரிய வழிமுறைகளை தேடிக்கொண்டு இருந்தது.

  வன்னி   மீதான போரினை சாதகமாக பயன்படுத்தி,தனது நீண்ட நாள் கனவினை நிறைவேறி கொண்டது சர்வதேசம்.தமிழருக்கான தீர்வு என்பதை விட.புலிகளை அழிக்க வேண்டும் என்பதிலையே சர்வதேசம் அதிக கரிசினை கொண்டிருந்தது.என்பதினை கடந்த வரலாறு எமக்கு மிக நன்றாகவே புரிய வைத்திருக்கிறது.வன்னி போரின் பிற்பாடு புலிகளின் செயற்பாடுகள் அற்று விட்டதான நிலையில் சர்வதேசம் தற்போது  தனது கவனத்தினை தமிழர்களின் தீர்வு என்பதன் மீது அக்கறை கொள்ளுவதாக கட்டி கொள்ளுகிறது.அவை எந்தளவுக்கும் உண்மைத்தன்மையோடு இருக்கும் என்பது சந்தேகமாக இருந்தாலும் .இவ்வாறன சர்வதேச மாறுதல்கள் தற்போதைய நிலைமையில் அவசியமானதாகவே கருதப்படுகிறது.இவற்றின் விளைவாக தற்போது சிங்கள அரசு பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளபட்டு வருவதினையும் ,சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருவதினையும் நான் அவதானிக்க  கூடியதாக உள்ளது.இந்தியாவின் மவுனம் ,மற்றும் சீன ரஷ்யாவின் சிறிலங்கா ஆதரவு கொள்கை என்பன பாதகமானதாக இருந்தாலும் .செல்வாக்கு மிக்க மேற்குலக நாடுகளின் மாற்றங்கள் ஈழ தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றன.இவ்வாறன மாற்றங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகசாதகமான ஏற்படுத்தும் என்பது நிச்சயம் .ஆயினும் சர்வதேசம் புலிஎதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபடவில்லை என்பது,புலிகள் மீதான தடைகளை அவர்கள் அகற்றாமல் இருப்பதில் இருந்தும்?ஆயுத போராட்டம் மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச முக்கியத்தர்களினால் வெளியிட பட்டதிலிருந்தும்.தெரிந்துகொள்ள  கூடியதாக இருக்கின்றது.

விடுதலை புலிகள் ஈழ தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதினை சர்வதேசம் இன்னும் ஏற்க தயாரில்லை.தமிழர்களின் பிரச்சனையையும் ,அவர்களுக்காக புலிகள் முன்னெடுத்த விடுதலை போராட்டத்தினையும் சர்வதேசம் வேறுபடுத்தியே பார்க்கின்றது.தலைவரின் மீள் வரவேன்பது ,புலிகளின் மீள் தோற்றமேயாகும்,இந்த நிலையில் தலைவர் வெளிப்பட்டால் ,சர்வதேசம் தற்போது கொண்டிருக்கும் தமிழர் சார்பான ஆதரவு கொள்கையினை கைவிட்டு மீண்டும் புலிவேட்டைக்கு புறப்பட்டு விடும்.இதனால் புலிகளின் மீள் தோற்றம் முலையினிலே கிள்ளி எறியப்படும் அபயமும்  ஏற்படும்.ஒரு பாரிய பின்னடைவின் பிற்பாடு இப்போதையை சர்வதேச பின்னணியில் புலிகளின் வெளிப்பாடு என்பது சாதகமாக அமையாது என்பது யதார்த்த நிலை.அத்தோடு ,முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்டம் தொடர்ந்திருந்த போதிலும் .சர்வதேசத்தின் பார்வையில் ஏற்படாத  தமிழர் சார்பான மற்றம் தற்பொழுது ஏற்பாடு வருகின்றது ,என்றே சொல்லவேண்டும்.சர்வதேச மட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அது ஆதரவினை அளிகக கூடியதான சத்தியங்கள் ஏற்படக்கூடும் .இதனால் தீர்க்க தரிசனம் மிக்க தலைவர் அவர்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மீண்டுமொரு சாதகமான நிலையில் ,அல்லது ,அவரது தீர்க்க தரிசனம் மிக்க கணிப்பின் படி தகுந்த சமையத்திலையே தன்னை வெளிப்படுத்தி கொள்ளுவார்.என்றே எதிர்பார்கலாம்,அவர் வெளிப்படுவதர்க்கான புறச்சுழல்கள் இன்னும் உருவாகாத நிலையில் வருகின்ற மாவீரர் தினம் எவ்வாறு அமைய போகின்றது?என்பது பற்றி பார்ப்போம்..

மாவீரர் தினம் என்பது தமிழீழ வரலாற்றி முக்கியத்துவம் மிக்க வாழ்வோடு ஒன்றி போய்விட்ட தினம்.இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும்,கடைசி ஈழத் தமிழன் உயிருடன் வாழும் வரைக்கும் நினைவு  கூறைப்படும் இந்த நினைவு நாள் ,தன இனத்துக்காக தம் ஆசாபாசங்களை மறந்து  தம் இன்னுயிரை துறந்த தியாகத்தின் சிகரங்களை நினைவுகுர எமக்கு வரமாக கொடுக்கபட்ட மாவீரர் தினத்தினை இம்முறை.ஒரு வித்தியாசமான உணர்வுகளோடு எதிர்பார்ப்புக்களோடு எதிர்கொள்ள காத்திருக்கிறது.ஒட்டுமொத்த தமிழினமும் நம் தேசத்தின் தம் இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரை தியாகம் செய்யத மாவீரர் கல்லறைகள் மண்ணோடு மன்னாக்கபட்டு  விட்டது.அவை இருந்த அடையலாம் இல்லாமல்  துடைத்தழிக்க பட்டுவிட்டன.இந்த மாவீரர்கள் ..தமது செல்வங்கள் ,தமது பிள்ளைகள் ,சகோதரர்கள் .நமது உறவுகள் .இவர்களின் தியாகங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது ,தம் வாழ்வையும் உயிரையும் தம் இனத்துக்காகவே கொடுத்த வீர புருசர்கள் இவர்கள்,தமிழன் என்று சொல்லி எம்மை தலைநிமிர  வைத்தவர்கள் .இம் மாவீரர்களின் நினைவு நாளை எழுச்சியோடு அனுஷ்டிக்க வேண்டியது ஒவவுரு தமிழனதும் தார்மீக கடமை,அனால் இக்கடமை என்பதையும் தாண்டி இம்முறை மாவேரர் தினத்தினை அனுஷ்டிக்க போகும்  முறையினால் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும்.பலமான செய்தி ஒன்றினை சொல்லவேண்டி உள்ளது,

அதாவது சர்வதேசத்தாலும்  சிங்களத்தாலும் 'பயங்கர வாதிகள்" என பொய்யாக முத்திரை குத்தபட்ட விடுதலை புலிகள் நம் மாவீரர்கள் ,எதோ விண்வெளியில் இருந்து குதித்தவர்கள் அல்லர் ,நமது சொந்த உறவுகள் தம் இனத்தின் அவலத்தினை கண்ணுற்று தாங்க முடியாமல் போராட புறப்பட்டவர்கள்,தாமாகவே தன்னுயிரை துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள் ,அவர்கள் பயங்கர வாதிகள் இல்லை ,நம் விடுதலைக்காக போராடிய சுகந்திர போராட்ட வீரர்கள்.அவர்கள் சுமந்த விடுதலை கனவைத்தான் நாமும் சுமக்கிறோம் .தமிழீழ தாகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல ,ஒட்டுமொத்த தமிழர்களின் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதினை அறுதியிட்டு  கூறுவோம்.இதுவரை நாட்களும் நாம் தொடர்ந்த போராட்டங்கள்தான் சர்வதேச மட்டத்தில்  பல மாற்றங்களை கொண்டுவந்து இருக்கிறது .மாவீரர் தினத்தினை நாம் உணர்வுடன் எழுர்ச்சியுடன் அனுச்டிபதன்  முலம் சர்வதேசத்திற்கு பல விடயங்களை புரியவைக்க முடியும்,தலைவரின் வருகை என்ற விடையத்திற்கு நாம் தற்போதைக்கு கவனத்தை செலுத்தாது,அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்று கடமையை சரிவர தொடர்வோம்,புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம்,அவர்களின் மீள் வரவேன்பது எமது கைகளியே உள்ள நிலையில் ,சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினை கொண்டுவரவேண்டிய மிகப்பெறி பொறுப்பு நம்மிடம் கொடுக்கபட்டு இருக்கின்றது,என்பதை நாம் உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சிய கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!!

!!மாவீரர்களை நாம் புதைக்கவில்லை.விதைத்திருக்கின்றோம்"
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

நன்றி ""பருத்தியன்""

 நம்பிக்கையொரு நாம் மாவீரர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகளை இம் மாவீரர் தினத்தில் சொல்லி ஒற்றுமையுடன் ..சர்வதேசத்துக்கு புலிகள் யார் என்பதையும் மக்கள் யார் என்பதையும்  புரியவைக்க தயாராகுங்கள் ...ஒன்றுபட்ட தமிழினமே ஒன்றுபட்டு செயற்படுவோம்  

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை