வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, November 5, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-34


மன்னார் நடவடிக்கை ஆரம்பிக்க பட்ட பின்னர்தான் மக்களின் இடம்பெயர்வும் அதிகரிக்க தொடங்கியிருந்தது .சாதாரமாக ஒரு குடும்பம் பல தடவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் இடம்பெயர்கிறார்கள்.இடம்பெயர்ந்தே இடம்பெயர்ந்தே இவர்களின் நகைகள் சொத்துக்கள் எல்லாம் அழிந்து போனது .சிறிலங்கா அரசின் பொருளாதார தடையினால் எரிபொருள் தட்டுப்பாடு-இதனால் உளவு இயந்திரத்தையோ ,லண்மஸ்ரரையோ வாடகைக்கு பிடிப்பது என்றால் குறைந்த பட்சம் ( 5000 ) ரூபாய் என்றாலும் வேண்டும் .( 20 ) கிலோமீற்றர் செல்வதுக்குள் வைத்திருந்த நகைகள் எல்லாம் வித்து சாப்பாட்டிற்கும்இடம் மாறுவதற்கும் பல சிலவளித்து விட்டார்கள்.கையில் பணம் இல்லாதவர்கள் நிலை கஞ்சிதான் இதே வேலை படையினரின் தொடர்ச்சியான இடைவிடாத தாக்குதலினால் விடுதலை புலிகள் நிலங்களை இழக்கவேண்டிய சூழ்நிலை
வந்துகொண்டிருந்தது.படையினருக்கு கணிசமான இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இழப்புக்களை பொருட்படுத்தாமல் உடனடியாக களமுனைக்கு அடுத்த அணியை கொண்டுவந்து இறக்கி தாக்குதலை தொடர்வதற்கு வசதிகள் இருந்தன.அனால் விடுதலை புலிகள் பக்கத்தில் இது பெரும் நெருக்கடியாக இருந்தது.படையினரின் எறிகணை வீச்சில் அகப்பட்டு சாவதற்கு தயாராக இருந்தவர்கள் எல்லாம் .களமுனையில் போராடி சாவதற்கு தயாராக இருக்கவில்லை.

என்பதுதான் வேதனை தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்த எதிரி தனது இனத்தின் உயிரையும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் இழப்பதற்கு தயாராக நின்றபோது.தங்கள் சொந்த நிலத்தை காப்பதற்கு மறுத்து தமிழ்மக்கள் பலர் ஓடி ஒளிந்து கொள்ள நினைத்ததுதான் கவலைக்குரியதாக மாறியிருந்தது.ஓயாத அலைகள் நடவடிக்கையில் ஆனையிறவை மீட்டெடுத்து பயந்து ஓடிக்கொண்டிருந்த சிங்கள படையினரை விரட்டி செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும்.அது முடியாமல் போனதற்கு காரணம் போராளிகளின் பற்றாகுறை.அவ்வாறு இருந்திருந்தால் யாழ் குடாவை மீட்டிருப்பேன் என்று ஒரு முறை பிரிக்கேடியர் பால்ராஜ் அவர்கள் உறுதியோடும் மிகவும் ஏக்கத்தோடும் குறிப்பிட்டிருந்தார்.மன்னாரில் எதிரி முன்னேறுவதற்கு இந்த பற்ற குறையே காரணமாகியது.ஆனாலும் இருக்கும் வசதிகளை கொண்டு எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் போராளிகள் இறங்கினார்கள்.இதனையடுத்துதான் குறைந்த போராளிகளுடன் இராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையிலான மண் அரனின் உருவாக்கம் அமைகிறது.இந்த மண் அரண்கள்தான் எதிரிக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி அவனது முன்னேற்றத்தை பெருமளவில் தடுத்து நிறுத்தியது.

இதே வேலை விடுதலை புலிகள் அமைத்த இந்த மண் அரண்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியது .சண்டை மிக கடுமையாக தொடர போகின்றது என்பதை இந்த மண் அறங்களே மக்களுக்கு உணர்த்தி நின்றன.இந்த நிலையில் பெரியமடு உடாக வந்த சிறிலங்கா படையினர் .மல்லாவி மற்றும் துணுக்காய் பகுதிகளுக்கு அண்மைப்(10 கிலோமீற்றர்கள் உள்ளன )எதிரியின் மோடார் எறிகணைக்கு எட்டகூடிய இலக்கிற்குள் வந்துவிட்டன.மறுபக்கம் ( ஏ9 ) வீதி உடறுக்கும் நோக்கில் வவுனியா பாலமோட்டை களமுனையின் உடாக சிறிலங்கா படையினர் பூநகரி நோக்கிய படை நகர்வினை மேற்கொள்ளுகிறார்கள்.இதே வேலை பாலமோட்டை, குன்சுக்குளம் ,நவ்வி போன்ற பகுதிகள் உடாக இந்த நகர்வு மேற்கொள்ள பட்டது.விடுதலை புலிகள் எதிர்தாக்குதலை முறியடித்து புதூர் கோவிலுக்கு அண்மைவரை வந்துவிட்டார்கள்.அதாவது (ஏ 9 ) வீதிக்கு மேற்காக ( 5-8 ) கிலோமீற்றர் வரையான துரத்தில் படையினர் வந்துவிட்டார்கள்.இதில் வவுனியா பாலமோட்டை களமுனை பற்றி இங்கு எடுத்துரைக்கவேன்டிய தேவை உள்ளது.

ஏற்கனவே இக்களமுனை பற்றி பார்த்திருக்கின்றோம்.எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இடங்களில் பாலமோட்டை மிக முக்கியமான களங்களில் ஒன்று.இந்த களமுனை வவுனியா கட்டளைதளபதியின் கீழ் பொருப்பானவர்களினால் கட்டளை இடப்பட்டு தாக்குதல் நடத்தபட்ட இடம்.பாலமோட்டை ,மன்னார் ..முல்லைத்தீவு .வவுனியா ,மாவட்டங்கள் என முன்று மாவட்டங்களின் ஓர் எல்லை கிராமமாக இருக்கின்றது.இங்கு பற்றை காடுகள் ,அடர்ந்த காடுகள் .அருவிகள் ,வயல்வெளிகள் என செழிப்பு நிறைந்த ஒரு வனப்பகுதியாகும்.காட்டுக்குள் ( 10 ) மீற்றர் துரத்தில் ஒருவர் நின்றால் கூட தெரியாத அளவிற்கு சிறுகாடும் பெரும்கடும் ஒன்றுசேர்ந்த இடம்.வவுனியா மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து .தற்போது எதிரியின் உள்ள தளபதி லோரன்ஸ் தலைமையின் கீழ்தான் வவுனியா மாவட்டம் அன்றைய காலப்பகுதியில் காணப்பட்டது.இதில் பாலமோட்டை களமுனை தற்போது எதிரியின் கையில் உள்ள பாப்பா எனப்படும் பொறுப்பாளரின் வசம் ஒப்படைக்க பட்டிருந்தது.பாலமோட்டை களமுனையில் எத்தனையோ படையினரை கொன்ற பெருமையும் ,அதேவேளை எத்தனையோ மாவீரர்களின் வரலாற்று தடங்களை கொண்ட இடமாகவும் மாறியிருக்கிறது.

இந்த பாலமோட்டை களமுனையில்தான் ஒரு பாடலாசிரியராக சிறந்த பொறுப்பாளராக ,சிறந்த போராளியாக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்த லெப்.கேணல் .ராணிமைந்தன் நின்று களமாடி வீரச்சாவை தளுவிகொன்டவர்.இப்படி எத்தனையோ போராளிகள் இந்த களமுனையை தக்க வைப்பதற்காக தங்களையே அற்பனித்திருந்தார்கள்.எத்தனையோ போர் வீரர்களான பல மாவீரர்கள் தடம் பதித்த மண் .பாலமோட்டையில் ஒரு அடி கூட எதிரியை முன்வைக்க விடமாட்டோம் என்று உறுதியோடு நின்று போராளிகள் போராடினார்கள்.எத்தனையோ களமுனைகள் எதிரியிடம் வீழ்ந்த போதும் இந்த களமுனை மட்டும் எதிரியின் கைகளுக்குள் இலகுவில் வீழ்ந்துவிடவில்லை.எதிரியின் நகர்வுகளை உடனுக்குடன் முறியடித்து தங்கள் காவலரண்களை விட்டுகொடுக்காத களமுனையாக போராளிகள் இங்கு நின்று போரடியிருந்தார்கள்.இவ்வாறன காலப்பகுதியில்தான் ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது.பாலமோட்டை பகுதி கட்டளைக்கு பொறுப்பாக இருந்த பாப்பா தனது துப்பாக்கி (கோல்கொமாண்டோ )தவறுதலாக வெடித்ததில் தனது காலில் படுகாயம் அடைந்து களமுனையில் இருந்து பின்னகர்த்த படுகிறார்.இது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதப்பட்டது.இச சம்பவம் பாப்பாவை பொருத்தமட்டில் சாதகமாக அமைகிறது.காயம் மாறுவதற்கு ஆறுமாத காலம் எடுக்கும்.இதனால் களமுனைக்கு செல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு எழவில்லை இறுதிவரை அவருக்கு அந்த வாய்ப்பு எழவேயில்லை என்பதுதான் உண்மை.இதேவேளை பாலமோட்டையை இறுதிவரை எதிரியால் கைப்பற்ற முடியவில்லை .எனினும் ஏனைய பிரதேசங்கள் படையினர் வசம் வீழ்ந்த நிலையில் பாலமோட்டை நிலைகளை புதூர் வரை போராளிகள் பின்னகர்த்தினார்கள்.இதன் பின்னரே பாலமோட்டைக்குள் படையினரால் உள்நுழைய முடிந்தது.
(தொடரும்)


***********************************************************************************
பேரன்புடையீர்!
வணக்கம்
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு கோவையில் நவம்பர்-6 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் துண்டறிக்கை மற்றும் அழைப்பிதழ் உங்களின் மேலான கவனத்திற்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
இம்மாநாட்டில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
நன்றி.
கண.குறிஞ்சி,
9443307681
தமிழக ஒருங்கிணைப்பாளர்
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்,
தமிழ்நாடு.

************************************************************************************




--
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையாகக் கொள்வீர் உலகத் தமிழரே!
தினமலர் இதழை புறக்கணிப்பதே தமிழனின் கடமையாகக் கொள்வீர்!











No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை