பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் கடந்த ( 33 ) வருடங்களாகப் பாதுகாத்து சென்ற மாவீரர்களுக்கு ,ஈழதமிழ் மக்கள் வீரவணக்கம் செலுத்தும் மாதமிது.இவர்கள் விதைக்கபட்டாலும்,ஏற்றிவைத்த விடுதலைப் பெரும் நெருப்பு தாயக புலம்பெயர் தமிழர்கள் நெஞ்சில் சுடராய் ஒளி வீசிக்கொன்று இருக்கிறது.முப்பதினாயிரம் உயிர் பூக்களை உதிர்த்து முல்லிவாய்க்களில் அமைதிகொண்ட விடுதலை போர் வேரடி மண்ணோடு கலந்து விட்டதாக பேரினவாதம் பெருமை கொள்கிறது.பன்னாட்டு படைக்கலங்கலென்ன ,பிராந்திய வல்லுருகளின் வல்லாதிக்க சக்திகள் என்ன,ஏது வந்தாலும் ,தாயாக கனவினை சிதைத்து சின்னபின்னமாக்க
முடியாதென்பதை.சூரிய புதல்வர்களின் ஒளிபடர்ந்த மக்கள் சக்தி.நீருபித்து காட்டும்..
இழப்பும் ,இருப்பும் எதிர்மறைகளின் எதிர்மறையை தோற்றுவிக்கும் இயங்கியல் நியதியைக் தன்னகத்தே கொண்டது.இருப்பின் இயங்கு தளத்தினை ,இழப்புக்களே இயங்க செய்கின்றன.உயிரணுக்களின் அசைவும் ,உயிர்தத்துவமும் ,அறிவியல் கோட்பாட்டின் பிரிக்கமுடியாத அம்சங்கள் என்பதை இழப்புக்களே புரியவைக்கின்றன.கடல் காட்டும் ,வானத்தின் எல்லையில் ,ஒளிப்பிழம்பாய் சிதறும் மைந்தர்களை புள்ளியாய் தரிசித்தவர்கள் (18 ) இல் கைகெட்டிய துரத்தில் கண்டார்கள்.கந்தகம் ,சுமந்த மேனியர்.விழுப்புண் அடைந்த போராளிகளுக்கும்,மக்களுக்கும் கவசமாக்கி தாயக காற்றோடு கரைந்து போனார்கள்.ஆயிரம் மிள்ளர்கள் அதிர்ந்தது இந்நாளில் ( 6000 ) படையினர் வீழ்த்தபட்டதாக எதிரியும் தலையாட்டினான்.அனைத்துலகம் விரித்த வியுகத்துக்குள் களமாடி மரணித்த வீரர்கள் எத்தனையோ.அம்பும் ,அதை எய்தவனும் மாவீரர் இலட்சியத்தை அளிக்க மோதிக்கொள்கிறார்கள்,பிரிந்த தாயகத்தை ஒட்டவைக்க முடியாதென பிரகடனம் செய்யும் மகிந்தர்,விடுதலை புலிகளின் தாயக கனவினை காவியபடி எவரும் தன்னிடம் வரவேண்டாம் என ஆணையிடுகிறார்,ஆதலால் சுவிசில் கூடிய தளம்பல் கூட்டு,மகிந்தவின் நிலைப்பாட்டை செவிமடுக்க வேண்டும் .சுயநிர்ணய உரிமை என்று கூறினால்,சிங்களம் சினம் கொள்ளுமென்று ,ஐ, ந சபையால் வரையறுக்க பட்ட சுயநிர்ணய உரிமை ,என்கின்ற ,ஒரு நழுவல் சொற்றொடரை இணைத்து விடும்படி கூட்டமைப்பினர் பணிவான வேண்டுகோள் ஒன்றினை விடுத்தனர்,
ஆயினும் தமிழ் தேசியத்துக்கு தனித்துவ இறைமை கொண்ட சுயநிர்ணய உரிமை உண்டென்கின்ர மாவீரர் இலட்சியத்தினை,எதுவித சமரசமும் இல்லாமல் அழுத்தி கூறிய ஒரே ஒரு கூட்டமைப்பின் சார்பாளர் இச சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்,பொது பிரககடனத்தில் கைச்சத்திடவும்,அவர் மறுத்து விட்டாதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன,முள்ளிவாய்களோடு சிலருக்கு, மனப் பிறழ்வு ,மனச்சிக்கல் ..தத்துவ சிக்கல் .எல்லாம் ஏற்பட்டுள்ளது.களமாடி வீழ்ந்த தேசத்தின் புதல்வர்களுக்கு மட்டும் ,தெளிந்த மனமும், நேர்கொண்ட இலட்சிய பாதையும் ,எவ்வாறு தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் உருவகியதென்பதை இச்சறுக்கள் வாதிகள் மதிப்பிட தவறிவிட்டார்கள்.ஆயுத போராட்டத்தை தவறென்றும் தமது அறியாமையால் திரிவுபடுத்த முனைவோர்,பொவுத்த சிங்கள பேரினவாதத்தின் வன்முறை சார்ந்த அடக்குமுறைகளுக்கு,காலவதியாகிப்போன கந்தியங்களை துணைக்கு அழைக்கிறார்கள் என்று என்ன தோன்றுகிறது.மே (18 ) பின்னர் எம்மில் பலர் பின்னடைவுக்கான பிரேத பரிசோதனைகளிலும்.புலம்பெயர் மக்களை சாடுவதிலையும் காழ்புணர்வு வெளிப்படுத்தலை ஆரோக்கியமான விமர்சனங்களாகவும் முன்வைத்து பேரினவாதத்தின் ஆளுமையை குறைத்து மதிப்பிட முற்படுகிறார்கள்.
அதே வேலை இந்த வாரம் லண்டன் தொலைக்காட்ச்சி ஒன்றில் தோன்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன் அவர்கள் தெருவித்த கருத்துக்களை அவதானிக்க வேண்டும்.புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் வட்டுகோட்டை தீர்மானம்.நாடு கடந்த தமிழீழ அரசு பற்றியதான விடையங்கள் குறித்து ,திரு ,சம்பந்தனிடம் வினாவியபோது,தாம் முன்வைக்க இருக்கும் சமஷ்டி வடிவிலான தீர்வுக்கும் இம் முயற்ச்சிகள் இடையுறாக அமையும்,என்ற கருத்தினை அவர் தெருவித்திருந்தார்.சுயநிர்னையை உரிமைக்கும் .ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி என்பதற்கும் இடையே உள்ள அரசியல் கோட்பாடு வேறுபாடுகளை உணரமுடியாதவராக சம்பந்தன் இருப்பதியிட்டு கவலை கொள்ளத்தான் முடியும்.இதைதவிர ஒஸ்லோவில் எதுவித கூட்டு பிரகடனங்களுக்கும் வெளியிடபாத யதார்த்தை புரிந்துகொள்ளாமல் ,ஒஸ்லோ பிரகடனத்தில்,சுயநிர்ணைய உரினையின் அடிப்படையில் சமஷ்டி தீர்வினை தமிழீழ விடுதலை புலிகள் ஏற்று கொண்டார்கள்.என்ற புதிய வியாக்கினம் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.விடுதலை புலிகள் நோர்வையில் உடன்பட்ட தீர்வினையே தாமும் முன்வைக்க விரும்புவதாக கூறுவதன் முலம் தமிழ் மக்களின் எதிர்புணர்வை திசைதிருப்ப பாக்கிறார்.( 30.000 ) மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்கள் குறித்து ,நேர்காணலில் எந்த இடத்திலும் சம்பந்தன் குறிப்பிடவில்லை.இந்திய ல்லாமல் தீர்வு இல்லை என்ற கருத்தினையே அடிக்கடி அழுத்தி கூறியவாறு இருந்தார்.( 87 ) இல் இந்திய முன்வைத்த வட-கிழக்கு இணைப்புள்ள மாகாணசபை தீர்வினை தமிழர் தரப்பு ( விடுதலை புலிகளையே அவர் குறிப்பிடுகின்றார் )
ஏற்ருகொல்லாதது ஒரு அரசியல் தவறு என்பதையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.பிள்ளையான் பாடும் அல்லல்களை தினம்தோறும் பத்திரிகைகளில் தினம்தோறும் வாசித்த பின்னரும் .அது ஒரு அற்புதமான தீர்வென்று எத்தன அடிப்படையில் அவர் கூற முற்படுகிறார் என்பதை சகல தமிழ் மக்களும் அறிவார்கள்.ஆனாலும் சிங்கள ஆட்சியாளர்கள் நீங்கள் முன்வைக்கும் சமஷ்டி தீர்வினை வழமைபோன்று நிராகரித்தால் ,தமிழீழ விடுதலை போன்ற போராட்டத்தை முன்னேடுப்பீர்களா.என்று ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்,-தமிழீழ உருவாக்கத்தை இந்திய விரும்பவில்லை என்பதாக இருந்தது.ஆகவே கூட்டமைப்பு வைக்கும் சுயர்நிர்ணய உரிமை கலந்து சமஷ்டி தீர்வினை சிங்களம் ஏற்றுகொள்ளாது,வெளியாக சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழம் உருவாகுவதை இந்தியாவும் உள்வாங்கி கொள்ளாது .இதேவேளை கூட்டமைப்பு சொல்லும் தீர்வினை இருதரப்பும் ஏற்று கொளாத பட்சத்தில்,ஐ ,நா சபையினுடாக வெளியாக சுயநிர்ணைய உரிமை கோட்பாட்டை முன்வைப்போமெனக் கூறுவது,சுயநிர்ணைய உரிமை தொடர்பான .ஐ ,நாவின் நிலைப்பாட்டை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று கணிப்பிட தோன்றுகிறது.திபத் சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசமென .சீன மண்ணில் நின்றவாறு .அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மிக தெளிவாக கூறிவிட்டார்.
புகலிட (நாடுகடந்த)அரசு என்கின்ற தீபத்தின் ஆன்மீக தலைவர் தாய்லாம கூறும் கருத்தியல் இங்கு ஓரம்கட்ட பட்டுள்ளது.இரண்டாம் உலக போரிட்கு முன்னான சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டில்,ஐ .நா சபையின் நிலைப்பாடு வல்லரசுகளினால் தீர்மானிக்க படுகின்றது.ஐ ,நாவின் கருத்தியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் ,அன்டோனியோ கசசோ,அவர்களின் புரிதலும் ஒரு நாட்டின் இறையன்மைக்குள் சிறுபான்மை தேசிய இனங்களின் உள்ளக சுயநிர்ணைய கொள்கையை வலியுறுத்துகிறது,கொலனித்துவ பிடியிலிருத்து விடுபடும் நாடுகளுக்கே வெளியாக சுயநிர்ணைய உரிமையை பிரயோகிக்கும் அருகதை உண்டென்பதுதான் ,கசாசோ,யின் வாதம் ஆகவே வல்லரசுகள் ஆசியாவில் நகர்த்தியுள்ள இரயதந்திர முறுகல் நிலைமை உலக பொருளாதார நிலைமை உருவாக்கியுள்ள பரந்துபட்ட சந்தை முதலீட்டு மாற்றங்கள்.ஈழ விடுதலை போராட்டத்தில் காத்திரமான தாக்கத்தையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும்,இதுவரை மாவீரர்களின் பெரும் அற்பனிப்புக்களால் .தமிழ் தேசிய இறையாண்மை பல அரசியல் காலங்களில் நிலைநிறுத்த பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரிக்கமுடியாத இறையன்மையானது ,சிங்களத்தை பொறுத்தவரை நடைமுறை சாத்தியமற்ற விடையமாகவே சித்தரிக்க படுகின்றது.பிராந்திய கேந்திர நலன்களுக்காகவும் ஆதிக்க போட்டியில் ஆளுமை செலுத்துவதில் ஏற்படும் போட்டியில் ,வெற்றி பெறுவதற்கு தமிழர் தேசத்தின் இறையாண்மையை இவர்கள் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்.எமது தேசத்தின் புதல்வர்கள் தமது வரலாற்று கடமையை இலட்சியத்தில் இருந்து வழுவாது நேர்த்தியாக நிறைவேற்றி உள்ளார்கள்,அதன் ஆழமான உள்ளார்ந்த இலட்சிய பற்றினை உணர்ந்து,விடுதலையை விரைவாக்கும் பணியில் சகலரும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும்...
நன்றி-இதயச்சந்திரன்
****************************************************************************************
வரும் மாவீரர் தினத்தன்று ..எமக்குள் இருக்கும் விரோதங்களை மறந்து எமது சுகந்திர வாழ்விற்காகவும் எமது மண்ணின் விடிவிற்காகவும் களமாடி மடிந்த மாவீரர்களை மக்களையும் ..உண்மை உணர்வோடு புசித்து எமது ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்தல் வேண்டும் ..நாம் ஒற்றுமையுள்ள இனால் எமது போராட்டம் பின்னோக்கி சென்றாலும் எமது மனங்களில் இருக்கும் தாகம் பின்னோக்கி செல்லவில்லை என்பதை இந்த உலகிற்கு பறை சாற்றுங்கள் .ஆயிரம் இடந்தில் மாவீரர் நினைவு கொள்ளலாம் ..அவர்களுக்கு நாம் உணர்வோடு கொடுக்கும் மரியாதையை ஒன்றே முக்கியமானது ...ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை செய்ய தயாராகுங்கள் ...

No comments:
Post a Comment