
எண்ணமும் திண்ணமும் எமது மக்களாகிய நீங்கள் சுகந்திர கற்றை சுகந்திர ஈழத்தில் சுவாசிக்க வேண்டும் என்பதே.என்னை போல களமாடி வீழ்ந்த பல்லாயிரம் போராளிகளும் இதே இலட்சியத்தோடுதான் கடைசிவரை களமாடி வீழ்ந்தார்கள்.
அவர்கள் களமாடிய வீரமும் அவர்களின் தியாகமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.முள்ளிவாய்க்கால் கடைசிநிமிடம் வரை தமிழீழ தேசியதாகத்தை சொல்லியபடி மடிந்த வீரர்கள் என்றுமே வரலாறு அவர்களை காலம் தாழ்த்தி போற்றும்.முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களுக்கும் விடுதலை போராட்டத்துக்கும் என்றுமில்லாத பேரிழப்பு என்பதை நாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது .வெற்றி என்பதும் தோல்வி என்பது ஒரு விடுதலை போரட்டத்துக்கு புதிதல்ல என்றுமே நாம் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.முதலில் நாம் ஒற்றுமை என்னும் வட்டத்தில் இருந்து என்று விலக நேரிட்டதோ அன்றிலிருந்து நாள் அழிவை நோக்கி பயணித்தோம் என்பது மறுக்க முடியாது.ஒரு மக்கள் சக்த்திக்கு ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை எமது போராட்ட வீழ்ச்சியிலிருந்து நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.வீழ்ந்துவிட்டால் அப்படியே இருந்துவிடுவதுதான் தோல்வியாகும் அதையே இன்று நாம் மக்களாகிய நீங்கள் பண்ணிக்கொண்டு இருக்குறீர்கள்.
எமக்கு காலம் கொடுத்த கொடையும் .ஈழமண் கொடுத்த மாபெரும் தலைவர் எமது தேசியத்தலைவர் முதலில் நாம் தேசியத் தலைவரை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.இவர் வாழ்ந்து வந்த காலங்களில் அவர் எதிர்கொண்ட விளைவுகளும் சவால்களும் தோல்விகளும் வெற்றிகளும் துரோகங்களும் எண்ணில் அடங்க்காதவை.இவை அனைத்தையும் தனது சிந்தனையின் மூலம் வெற்றிகொண்டவர் எமது தேசியத் தலைவர். தலைவரை என்றுமே தோல்விகள் துவள வைத்தது இல்லை..யாருக்காக எமது தலைவர் ஆயுதம் எடுத்தாரோ அந்த மக்கள் கோழைத்தனமான முறையில் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்க படும்பொழுது.போரை தொடர்ந்து மேலும் அவர்களுக்கு அழிவை கொடுக்க என்றுமே எமது தலைவர் விரும்ப மாட்டார் விரும்பியதும் இல்லை ..மக்களை கேடையமாக வைத்து அவர்களை இலக்குவைத்து தாக்குதலை தொடுக்கும் எதிரி மீது.எமது தாக்குதலை தொடுத்தால் வரும் விளைவுகள் என்ன என்பதை எமது தலைவர் சிந்தித்தே பின்னகர்வுகளை மேற்கொண்டார்.
இதற்க்கு பெயர் தோல்வியல்ல சிங்கள அரசும் .இந்திய அரசும் .பல உலக நாடுகளின் கோழைத்தனம்.இந்த கோழைத்தனத்தை என்றுமே எமது தலைவர் சிந்த்தித்து இல்லை ..அப்படி ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால்..நீங்கள் இன்று இப்படியெல்லாம் பேசிகொண்டிருக்க மாட்டீர்கள்..இன்று முள்ளிவாய்க்கால் விளைவுகளை போல பல மடங்கு விளைவுகளை சிங்கள தேசம் கண்டிருக்கும்.
இந்த போரை நிறுத்தவே எமது இயக்கம் பாடுபட்டது கரணம் நாம் யாருக்காக போராடிக்கொண்டு இருக்கிறோமே அவர்கள் அழிந்துகொண்டிருக்கையில் நாம் போராடிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.எமது இனம் அளிக்கபட்டால் நாம் யாருக்காக போராடுவது?நாம் மக்களுக்காக போராடுகின்றோம் நாம் என்றுமே சாவை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள் நாம் என்றுமே மரணத்துக்கு பயந்தது இல்லை நாம் இறந்தும் உங்களை வாழவைப்போம்.அதையே இன்றும் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.மக்களே பல்லாயிர கணக்கான மாவீரர்களும் மக்களும் வீழ்ந்துவிட்ட எமது மண்ணில் பிறந்து வளர்ந்து புலம்பெயர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களாகிய நீங்கள் இன்று செய்யும் காரியங்களும் செல்லும் வழிகளும் சரியானதா என்பதை நீங்கள் ஒருகணம் சிந்தித்து பாருங்கள் .நீங்கள் முள்ளிவாய்க்காலின் போது செய்த போராட்டங்கள் எல்லாம் வீண் அற்று போய்விடவில்லை..
அனால் இன்று அதே போராட்டங்கள் தான் எமது மக்களுக்கான சுகந்திர வாழ்வையும் சுகந்திர ஈழத்தையும் பெற்று கொடுக்கும் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா ?
ஈழ மக்கள் இன்று சிறைக்கைதிகளாக இருக்கும் மக்களால் எதுவும் செய்துவிட முடியாத நிலை ..ஜனநாயகம் அற்ற ஒரு நாட்டிலிருந்து ஜனாநாயகம் பற்றி பேசுவது என்பது நடக்ககூடிய காரியமில்லை.அனால் நீங்கள் வசிக்கும் நாடு ஜனாயக போராட்டத்திற்கு சுகந்திரம் கொடுக்கும் நாடு உங்கள் உரிமைகளை உங்களுக்கு இழைக்கபட்ட அநீதிகளை தட்டி கேட்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு.நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது மக்களை பிரிக்கும் சதிகள் அரங்கேறிய வண்ணமே இருக்கு ..இதனால் மக்களுக்காகிய நீங்கள் பிரிவடைந்து செல்வீர்கள் ..இன்று சதி சூழ்ச்சிகள் இடம்பெற்று கொண்டிருக்கிறது .
.இன்று மக்களாகிய உங்களை பிரித்து பல துண்டுகளாக உடைத்து ..அடுத்த கட்டமாக சுகந்திர வாக்கெடுப்பு என்னும் பெயரில் ஈழத்துக்கான தெரிவு நடக்கும் வேளையில் நாம் பலதுண்டுகளாக எமது வாக்குகளும் பிரிவடைந்தே செல்லும் ..அன்று நாம் கண்ட ஈழம் என்னும் கோட்டையை நாமே உடைக்கவேண்டிய சுழல் உருவாகும் இதற்க்கு நாம் உடந்தையாக இருக்க போகிறோமா ?இல்லை இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து ஒற்றுமையுடன் வாழ போகின்றோமா ?நாம் ஈழம் கனவை நினைவாக்க வேண்டுமென்றால் எமது மாவீரர்களின் கனவு நினைவாக வேண்டும் என்றால்
நாம் ஜனநாயக வழியில் பலமாக போராடியே ஆகவேண்டும் .....நாம் காலம் கடத்தும் காலங்கள் அனைத்தும் நாம் பிரிவடைந்து கொண்டிருப்போம் என்பது நீங்கள் சிந்திக்க வேண்டும் ..வெறும் வார்த்தைகளால் மட்டும் இலக்கை எட்டிவிட முடியாது .செயலில் நீங்கள் யார் என்பதை உங்கள் போராட்டங்கள் மூலம் காட்டுங்கள்..எமது தாய் உறவுகளான தமிழக மக்களே நீங்கள் அன்றும் சரி இன்றும் சரி எமது மக்களுக்காக பலவழிகளில் போராடிக்கொண்டு இருக்குறீர்கள் ..அனால் உங்கள் போராட்டம் அரிசியல் கதவுகளை தட்டியதாக தெரியவில்லை .
.இதற்க்கு ஒரு காரணம் ஒற்றுமை இன்மை ஒரு பெரும் பலமான இனமாக இருந்தும் .சில குள்ளநரிகளின் கால்களில் வீழ்ந்துகிடக்கும் அரசியல் வாதிகளின் உணர்வற்ற செயலால் இன்று தமிழகம் தமிழக மீனவர்களின் படுகொலையை தடுக்கமுடியாத நிலையில் இன்று தமிழக மக்கள் .
உறவுகளே தமிழ் மக்களே நாம் ஒன்றுபட்டு எமது மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது ..பல கசப்புக்கள் எமக்குள் இருந்தாலும் நாம் ஒன்றுபட்டு எமது மாவீரர்களுக்கு ஒளியேற்ற வேண்டும் இதுவே நாம் எமக்காக மரணித்த வீரர்களுக்கு செய்தும் காணிக்கை ...
ஒன்றுபட்ட இனமே வெற்றிபெறும் ..வென்று காட்டுவோம் .ஈழம் வென்று காட்டுவோம் ..எமக்கும் கைகொடுக்கும் நாள் வரும் சர்வதேசம் அதுவரை நாம் அவர்கள் கதவுகளை தட்டுவோம் ..
நன்றி -ஈழ மைந்தன் யாழ்
No comments:
Post a Comment