வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, November 18, 2011

சுகந்திர தமிழீழ தனியரசு என்ற அச்சைவிட்டு விலகியோடும் தேர்கள் இடைவழியில் தெருவிலையே நின்றுவிடும்

தமிழர்களின் அரசியல் ஒழுங்கமைப்புக்கள் தமிழர் நலன்களுக்காகவும் தமிழரின் சுய அரசியலுக்காகவும் தமிழர்களின் சமுக கலாச்சார காவலர்களால் மட்டுமே ஏற்படுத்தபாடல் வேண்டும்.அந்த அரசியல் அமைப்புக்கலானது தமிழர்களுக்காக தனித் தேசத்தை உருவாக்கும் போராட்டத்திலையே தம்மை ஈடுபடுத்தல் வேண்டும்.எந்த போராட்ட பின்னடைவுகளாலும் தயங்கி நிற்காது தடைகள் தாண்டி முன்னேற வேண்டும்.முள்ளிவாய்க்கால் இராஜதந்திரங்களை முட்டுகட்டைகளாக நினைப்பவர்களின் சதிவலைகளை முறியடித்து இன்றைய தமிழர் அரசியல் முன்னேற வேண்டும்.எமது அரசியல் சமுக பொருளாதார அமைப்புக்கள் அனைத்துமே ஜெனநாயக வழிமுறைகளை அதன் வெளிக்கட்டமைப்பிலும்,தேசிய விடுதலையை அதன் ஆணி வேரிலும் மிக அழுத்தமாய் உறுதியாய் கொண்டிருத்தல் வேண்டும்.



இது இன்றைய தாயகத்தில் நடத்தப்படும் தேர்தல் அரசியலையும் மேவி அதன் மீதான தனது தேசிய விடுதலையை ஆணித்தனமாக சொல்லவேண்டும்.தன இயங்கு நிலையின் ஆளுமையை தேசிய தாகத்தை சர்வதேச முட்டுக்கட்டைகளை மீறி செயற்படுத்த வேண்டும்.இதுவே தாயக,புலம்பெயர் தமிழர்களின் அரசியல் வெளியாகும்.சிறிலங்காவுக்கு துணைபோகும் நாடுகளின் அபிவிருத்தி என்ற போர்வையிலான இனவெறியும் சிங்கள தேசிய வாதத்தையும் உக்குவிக்கும் நிதி உதவிகளை நிறுத்த சர்வதேச ஆளுமையை இவ்வமைப்புக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.வெறுமனையே ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் எதுவுமின்றி தேசிய விடுதலையின் மீதான நம்பிக்கைகளை உடைத்து அபிவிருத்தி என்றும் மேம்பாடு என்றும் தமிழர் இருப்பும் மேலையே சந்தேகம் கொள்ளும் நடவடிக்கை எமை நசுக்க முனையும் ஆசிய கூட்டு சக்திகளின் வலையமைப்பில் அசைவியக்கம் கொண்டு புலம்பெயர் தமிழர்களை குழப்பும்,திசைதிருப்பும் நடவடிக்கைகளை எந்த அமைப்புகளும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
 தமிழர் பேரவைகள் தமது அரசியல் களங்களில் விர்வடைய வைத்து அதன் வீச்செல்லைகளை உயரே கொண்டுசெல்லும் வேளையில் அதன் செயற்ப்பாடுகளை உக்குவிக்க தமிழர் சமூகம் சிந்திக்க வேண்டும்.எமை காலநித்துவபடுத்து ஆண்டு ,எமது ஆட்ச்சி உரிமைகளை பறித்த பிரித்தானிய அரசாங்கமே இன்று புலம்பெயர் தமிழர்களின் போராட்ட நியாயங்களை புரிந்துகொண்ட பங்கேற்க தொடங்கியுள்ளன.உலகத்தமிழர் பேரவையின் உருவாக்கத்தில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் கலந்து கொண்டதும்,பிரித்தானிய பிரதமர் அவர்களை சந்தித்ததும் எமது விடுதலையை நோக்கிய பயணத்தில் முக்கிய திருப்புமுனைகளாகும்.இது தாயக தமிழர்கள் இழந்து நிற்கும் விடுதலைக்கான அரசியல் இடைவெளியை நிரப்பும் பிரித்தானியாவின் நாடளமன்ற வளாகத்தினுள்ளே உலகத்தமிழர் பேரவை உருவாக்கம் பெற்றது சிறிலங்காவின் இன அடக்குமுறைக்கு ஒரு சவாலாகவே அமையும்.இந்த ஏற்ப்பட்டிர்க்கு எதிராக சிறிலங்கா இன அழிப்பு அரசாங்கம் தன எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் வெளிக்காட்ட தவறவில்லை.
 அனால் சிறிலங்கா நாடளமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வேளையிலும்.ஈழத்தமிழர் போராட்டம் ஜனநாயக வழியில் உரிதியடைய தொடங்கும் வேளையிலும் சர்வதேச பினக்குகளுக்கான அமைப்பு( )தனது அறிக்கையில் ,ஈழத்தமிழர்கள் என்று அழைத்துவந்த பதத்தை சிறிலங்கா தமிழர் என அடையலாம் காட்ட தொடங்கியுள்ளது.ஈழத்தமிழர் போராட்டங்களையும் ஜனநாயக நடவடிக்கைகளையும் புலிசார் நடவடிக்கைகளாக காட்டவும் முனைகிறது.தமிழீழ தனியரசு என்பது விடுதலை புலிகளுக்கு முன்னரே தமிழ் மக்களால் ஒருமித்து எழுப்பபட்ட குரலாகும்.இது இன்று புலம்ப்யர் தேசமெங்கும் மீள் வலியுறுத்த படுகின்றது.இவற்றை நன்கு உணர்ந்துள்ள சர்வதேச பினக்குகளுக்கான அமைப்பு இப்படியான கருத்துக்களை ஏற்படுத்த முயல்வது கண்டிக்க தக்கது.ஈழத்தமிழர்கள் பற்றியும் ஈழதமிழர்களின் தேசிய தாகம் பற்றியும் நன்று அறிந்த சர்வதேச பினக்குகளுக்கான அமைப்பு, இப்போது தமிழீழ மக்கள் தம் புனர்வழ்வுகளையும் அபிவிருத்திகளை பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும்,தமிழீழம் பற்றிய கவலை அவர்களிடம் இல்லை என்பதாகவும் தமது அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.புலம்பெயர்ந்த மக்களுக்கு தாயக மக்களுக்கும் இடைவெளி அதிகரித்து விட்டதாகவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எமக்கு ஏற்பட்ட பாரிய தோல்வியின் பின்னர் ,எம் சுகந்திர உணர்வு மங்கி விட்டதாக,கூறியிருக்கும் சர்வதேச பினக்குகளுக்கான அமைப்பு முற்றுமுழுதாக யதார்த்தத்தை உணர மறுத்துள்ளது.ஆயுத போராட்டம் ஒத்திவைக்க பட்டாலும் தமிழர்களின் தமிழீழ சுகந்திர தாகம் என்றும் அடங்கிவிடவில்லை.என்பதற்கு தமிழீழ மக்களின் ஜனநாயக ரீதியிலான,சர்வதேச ரீதியிலான தமிழீழ விடுதலை போராட்டம் முனைப்பு பெற்றிருப்பதே இதற்க்கு சன்றகின்றது. சிறிலங்கா இனவெறி அரசிற்கு வக்காலத்து வாங்கும் சர்வதேச பினக்குகளுக்கான அமைப்பு சிறுபான்மை தமிழர்கள் தமது நலன்களை பெற நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ,அரசியல் தீர்வுகள் ஏற்பட நீண்ட கால அவகாசம் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.நீண்ட கால காலநித்துவத்திடமும் ,நீண்ட கால இனவெறி அரசுகளிடமும் போராடிய தமிழ் இனம் இன்னும் சில நுர்ராண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கருத்து போலும்?

ராஜபக்சங்களும் இதையேதான் விரும்புகின்றனர்,காலம் தாழ்த்தபட்ட போராட்டங்கள் வீரியம் இழந்துவிடும் எனும் இவர்களது சித்தாந்தம் இன்று புலம்பெயர்ந்த மக்களால் சிதைக்கப்படும் போது சிறிலங்கா அதிர்ச்சிக்கு உள்ளாவது எதிர்பார்க்க தக்கதே.இதே போராட்ட முனைப்பை மழுங்கடிக்க இந்திய பலமாக களமிறங்கியுள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பை சம்பந்தர் முலமாக நேரடியாக தன கட்டுபட்டின்கீழ் கொண்டுவந்து தனது டில்லி ஆட்சிபீடத்திலையே முகாம் அமைத்து கொடுத்து சம்பந்தது தன் பங்குக்கு அவர்கள் ஆட்டும் நுலுக்கு வித்தை காட்டியபடி தமிழர் என்றுமே பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும் தமிழீழம் எமது கோரிக்கை இல்லைஎன்றும் எதோ பிட்சை கேட்க்கும் அளவிற்கு ஆட்சியதிகாரம் தந்தாள் போதும் என்றுதானே தமிழர்களின் தனிப்பிரதிநிதி போல் புலம்ப தொடங்கியுள்ளார்.விடுதலை உணர்வுமிக்க மக்களிடம் இந்த வித்தைக்காரர்கள் விளையாட்டு செல்லபோவதில்லை.இந்தியாவின் ஆட்டுவிக்கும் கயிறு ,தமிழ் தேசிய கூட்டாமைப்பையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசம்வரை நீண்டு வந்துள்ளது,இங்கு நடக்கும் ஜனநாயக,அரசியல் நகர்வுகளை திசைதிருப்ப எம்முள்ளையே தம் கைய்தடிகளையே செயலில் இறக்கியுள்ளது.இன்று தமிழீழ தனியரசுக்கான நடவடிக்கைகளில் இருந்து தமிழர்களை திசைதிருப்ப புத்திஜீவிகளின் துணையோடு பலர் களம் இறங்கியுள்ளனர்.
இந்த செயற்ப்பாடுகள் நன்றாகவே மக்களை சோர்வடைய பயன்படுத்த படுகின்றது.முள்ளிவாய்களோடு தமிழர் இருப்பை கேள்விக்குறியானதன ஒரு மாயையை நன்கே விதைக்க தொடங்கியுள்ளனர்.எனவே இதிலிருந்து தெளிந்து வந்து தமிழீழ தாகத்தை விடுதலைக்கான பயணத்தை மேற்கொள்ளவேண்டிய பணி புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே உள்ளது .


**சுகந்திர தமிழீழ தனியரசு என்ற அச்சைவிட்டு விலகியோடும் தேர்கள்,இடைவழியில் தெருவிலையே நின்றுவிடும்**

நன்றி -சோழ கரிகாலன்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை