வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, January 2, 2012

பிரான்ஸ் பார்த்து வெட்கப்பட வேண்டிய இந்தியாவும் மங்கிப்போன உணர்வுகளுடன் தமிழக மக்களும்


 எமது அடையாளங்களை  முத்திரைகளாக வெளியிட்ட  பிரான்ஸ் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியது தமிழர்கள் கடமை... நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..சாவதற்காக யாரும் வாழ்வதில்லை ...எமது நிலைமையும் அப்படித்தான் நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..அனால் எமது வாழ்க்கையை சீரழித்து எம்மை சாகடிக்கிறான் எதிரி ..நாம் அவனிடமும் எமது வாழ்வியலை காக்கவும் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறோம்.எமது போராட்டம் அறபோராட்டம் அகிம்சை போராட்டம் கடைசியில் ஆயுத
போராட்டம் என்று போராடி வெறியும் தோல்வியுமாக இன்று ஒரு இக்கட்டான நிலையில் நாம் புதிய ஆண்டிற்குள் தமிழர்கள் ஆகிய நாங்கள் காலடி எடுத்து வைக்கிறோம் ..(2009 ) ஆண்டு எமது வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டாகவும் தமிழர்கள் மனங்களில் இந்த ஆண்டு எப்போதுமே கொழுந்து விட்டெரியும் நெருப்பை போல எரிந்துகொண்டே இருக்கும் ...

 அனால் இப்போது பிறந்திருக்கும்2012 ஆண்டு பிறக்கும் முன்னரே எமது தமிழினத்துக்கு ஒரு நற்செய்தியை கொடுத்திருக்கிறது ..அதுதான் பிரான்ஸ் அரசானது தமிழர்களின் வரலாற்று சின்னங்களையும் தேசியத்தலைவர் படத்தினையும் கொண்டு முத்திரைகளாக வெளிவந்து உள்ளன ...இது உண்மையிலே புலம்பெயர் தமிழர்களுக்கு அவர்கள் போராட்டத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லவேண்டும்..இன்னும் சொல்லபோனால் பிரான்ஸ் அரசானது எமது இயக்கத்தை தடை செய்யாத நாடு...ஒரு குறுகிய தமிழர்களை கொண்ட நாடு ...அனால் இவளவு காலம் தாழ்த்தி தமிழர்களின் அபிலாசைகளை இந்த அரசு

ஏற்ருகொண்டுள்ளதை என்பதை நாம் இனிவரும் காலங்களில் புரிந்து கொள்ளலாம் .நாம் முப்பது வருடங்களாக போராடி பல அழிவுகளை சந்தித்தும் அப்போது கண்டுகொள்ளாத பிரான்ஸ் தமிழர்கள் மீது ஒரு இன அழிப்பை சந்தித்து விடுதலை போராட்டம் வீள்ச்சியடைந்தும் மக்கள் சொல்லென்னா துயரங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் பிறக்குபோகும் இந்த ஆண்டை தமிழர்களுக்கு ஒரு சிறிய சந்தோசங்களுடன் ஆரம்பிக்க வழி செய்திருக்கிறது மதிற்பிற்குரிய பிரான்ஸ் அரசு ..


 இப்போது நாம் என்னசெய்ய போகின்றோம் ? எமது அடையாளங்களை அங்கீகரித்த அரசுக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றி சொல்ல வேண்டாமா.கண்டிப்பாக சொல்லவேண்டும் ..உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் இந்த அரசுக்கு நன்றி சொல்லி கடிதங்களும் ..பாராட்டு நிகழ்சிகளும் பிரான்ஸ் வாழ் மக்களால் செயல்படுத்தப்பட வேண்டும் ...இதே வேலை வெளியிட பட்டிருக்கும் இந்த முத்திரையை எல்லா மக்களும் முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துதல் வேண்டும் ...நாங்கள் பயன்படுத்தும் முத்திரைகள் தனியாக எமது அடையாளங்கள் கொண்ட முத்திரைகளை மட்டும் பயன்படுத்தாமல் ..பிரான்ஸ் நாட்டு முத்திரைகளுடன் சேர்த்து பயன்படுத்தி அந்த நாட்டு மக்களுக்கும் எமது ஒற்றுமையை வெளிப்படுத்துதன் வேண்டும் ...எமது வரலாற்று சின்னங்கள் அழியாமல் பாதுக்காக்க வேண்டுமானால் இனிவரும் காலங்களில் நாம் ஒன்றிணைந்து போராடி நீங்கள் வாழும் நாடுகளிலும் எமது நியாயங்களை எடுத்துகூறி எமக்கான உரிமைகளை பெற்று கொள்ளுதல் வேண்டும் ...இதற்காக நீங்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் இனிவரும் காலங்கள் எமது மக்களுக்கு நின்மதியும் சுகந்திர வாழ்வையும் கொடுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே உலக வாழ் தமிழ் மக்களின் எண்ணமும் ..

 ** வெட்கப்பட வேண்டும் இந்திய**

மகாத்மா காந்தியும் , இன்னும் பல காந்திகளும் ..பல பல நேருக்களும் ,அகிம்சையாலும் ஆயுத போராட்டத்தாலும் சுகந்திர நாடு பெற்று கொண்டதாக ,மக்கள் சுகந்திரம் அடைந்து விட்டதாக பீத்திக்கொள்ளும் இந்திய ..தான் அகிம்சை கொண்டும் ஆயுதம் கொண்டும் ...வாங்கிய சுகந்திரம் அதை வாங்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாவற்றையும் மறந்து ...ஒரு சிறந்த பண்பாட்டை கொண்ட இனம் யாருக்குமே தீங்கு விளைவிக்காத இனம் ,சுகந்திரமாக வாழ நினைக்கும் இனம் ...சொந்த மண்ணில் நின்மதியாக வாழ நினைக்கும் இனம் ..பல வரலாற்றை கொண்ட தமிழினம் சுகந்திரம் வேண்டி போராடினால் அதை அடக்கி அழிக்க நினைக்கும் சுகந்திர நாடாம் இந்திய ? தான் பெற்ற சுகந்திரத்தை இன்னொரு இனம் அடைய நினைக்கும் போது அதை அழிக்க நினைக்கும் இந்திய சுகந்திர நாட ? இன்னொருவன் சுகந்திரத்தை பறிக்க நினைக்கும் நீ மனிதநேயம் அற்ற நாடு ...எட்டுகோடி தமிழர்களை தான் இனமாக கொண்ட இந்திய அரசு பக்கத்து கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய ஈழம் இதை உனது எட்டுகோடி தமிழர்களின் சொந்தங்கள் என்று நினைத்து ஆதரிக்க கூடாத?

  வெட்கப்பட வேண்டும் இந்திய அரசே வெட்கப்பட வேண்டும் ..சில லட்சம் தமிழர்களை கொண்ட பிரான்ஸ் அரசுக்கு மனிதநேயம் இருக்கும் என்றால் ...வெட்கப்பட வேண்டியது மனிதநேயம் அற்ற இந்திய அரசுதான் ..முதலில் மனிதநேயம் பற்றி தெரியாத அரசு அகிம்சைக்கு பெயர்போன மகாத்மா காந்தி பெயரை கூட உச்சரிக்க தகுதியற்றது இந்திய பேரரசு ..ஒரு இனத்தின் உணர்வுகளை மதிக்க தெரியாத ஒரு நாடு மனிதநேயம் உள்ள நாடாக இருக்க முடியாது ..இதனால் தான் நாட்டுக்குள் இருக்கும் தான் இன மக்களின் உணர்வுகளை சீண்டி பாக்கிறது இந்திய பேரரசு ..

 ஒரு இனத்தை அழிக்க சொல்லும் காரணங்கள் ..பிராந்திய வல்லரசு ,தமிழர்கள் பயங்கர வாதிகளாம் ,அன்று பிரித்தானியாவிடம் இருந்து சுகந்திரம் அடைய இவர்களும் தான் போராடினார்கள் அப்படியானால் இந்திய அரசும்தான் பயங்கர வாதிகள் ..ஒரு இனத்தை அழிக்க ஆயுதமும் ..தமிழ் பெண்களை சீரழிக்க இராணுவத்தையும் அனுப்பிய ஒரே அரசு இந்திய அரசுதான் ..இவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் ..இந்தியாவை தான் தாய் நாடு என்று சொல்லுவதற்கு வெட்கப்படவேண்டும் இந்திய குடிமக்கள் ..ஒரு இனத்தை அழிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ..தான் நாட்டு இராணுவம் ஈழ பெண்களை சீரளித்தபோது மவுனித்த மக்களும் ...இளம் பிஞ்சுகளை கொன்றொழிக்க குண்டுகளை கொடுத்த இந்தியாவை தாய் நாடு என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் இந்திய குடிமக்கள் ..ஒரு வேளை சாப்பாட்டிற்கு திண்டாடும் நிலைக்கு தமிழினத்தை தள்ளிவிட்டு ... வீடுகளையும் பாடசாலைகளையும் அழித்துவிட்டு .. நீங்கள் கட்டியிருக்கும் அடுக்குமாடி வீடுகளும் ..பளிங்கு கற்கள் கொண்டு கட்டபட்ட வீடுகள் சுகமாக வாழுகிரீர்களே நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும் ...எமது மக்கள் விட்ட கண்ணீரும் சிந்திய இரத்தமும் கொடுத்த விலைகளும் இதற்க்கு என்றாவது ஒருநாள் இந்த பேரரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் ..

 (2020 ) எமது நாடு வல்லரசு ஆகும் என்று பீத்திகொள்ளும் இந்திய குடிமக்களே ..ஒரு இனத்தின் இரத்தத்தின் மீதுதான் உங்கள் நாடு வல்லரசு ஆக வேண்டுமா? ஒரு இனத்தை அழித்துதான் நீங்கள் வாழ வேண்டுமா? மனிதநேயம் இல்லாத மனிதர்களா நீங்கள் ? தமிழகம் தவிர்ந்த தமிழ் இனம் தவிர்ந்த எந்தவொரு இனமாவது இந்தியாவில் ஈழ அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்தீர்களா? ஒரு ராஜீவ் உயிருக்காக பல லட்சம் மக்களை பலி வங்கிநீர்களே...உங்கள் ராஜீவ் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்றோளித்தானே அது உங்கள் கண்களுக்கு படவில்லையா? உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதி இதுதான் உங்கள் ஜனநாயகமா ?இந்திய அரசே இனியாவது பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலாவது உங்களின் இதயக் கதவுகள் திறந்து ..மூடியிருக்கும் கண்கள் திறந்து ..தமிழர்களின் உரிமை போராட்டத்தை ஏற்றுகொள்வீர்களா? தமிழர்கள் சுகந்திரமாக வாழ விடுவீர்களா? உங்கள் தவறுகளை திருத்தி ஒரு இனத்தின் உணர்வுகளை மதித்து .அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் சுகந்திர காற்றை சுவாசிக்க வழிசமைத்து கொடுப்பீர்களா? இல்லையென்றால் (1989 ) இல் தொடர்ந்த பல்லவியை மீண்டும் பாடிகொண்டே இருக்க போகிறீர்களா? இல்லை (2009 ) நடத்தியது போல மீண்டும் ஒரு முறை உங்கள் கையாளாக தனத்தை நீருபிக்க போகிறீர்களா? இந்திய அரசே மீண்டும் சொல்லுகிறோம் நாம் ஒரு பாரிய பண்பாட்டை கொண்ட இனம் ..எமது உணர்வுகளை சீண்டி பார்க்காதே ..நாம் சீண்டி பார்க்க ஆரம்பித்தால் ..ஆழ பிறந்த எமக்கு அழிக்கவும் தெரியும் என்பதை நீ புரிந்து கொள்வாய் ...



மீண்டும் சொல்லுகிறோம் நாம் ..தமிழினம் பாரிய பண்பாட்டை கொண்ட இனம் நாங்கள் காட்டு மிராண்டிகள் இல்லை ..நாம் யாரையும் அழித்து அவர்கள் கண்ணீரில் வாழ விரும்ப மாட்டோம் ...பிறந்திருக்கும் இந்த ஆண்டில் எமக்கு நல்வழி திறக்கும் என்ற நம்பிக்கையோடு ..


*** மங்கிப்போன தமிழ் உணர்வும் மங்காத வீர பேச்சுக்களும் ***

செந்தமிழ் நாடாம் தமிழ் நாடு ..ஒரு காலத்தில் பல பல லட்சம் உணர்வாளர்களை கொண்ட தமிழகம் ..பண்டைய காலத்தில் பல  வீரர்களும் பல தியாகிகளும்  ..பல அரசர்களும் ..பல வீர மங்கைகளும் வாழ்ந்து வரலாகிபோன தமிழக மண்ணில் ..இன்று சாதி, மதம் ,கட்சி அரசியல் என்று அடித்துகொள்ளும் தமிழர்கள் வாழும் தேசமாகி விட்டது தமிழகம் ...உணர்வு என்று போராடும் பல உணர்வு என்றால் என்ன என்று கேட்க்கும் பலர் ..தமிழையே உச்சரிக்க தயங்குகின்ற மங்கிப்போன தமிழுணர்வு மங்கி கொண்டிருக்கும் தமிழ் உணர்வை மீண்டும் கட்டியெழுப்ப தமிழ் தமிழக சமுதாயம் முயலுமா? இந்த புதிய ஆண்டிலாவது சிந்தித்து செயல்படுமா? தான் ஆடவிட்டாலும் சதை ஆடும் என்று சொல்லுவார்கள் அந்த சதை இந்த ஆண்டிலாவது ஆடுமா?

மேடைகளில் வீரமான பேச்சுக்களும் அரசியலில் ஆவேசமான பேச்சுக்களும் பேச்சுக்கு மட்டுமே முன்னிருமை கொடுக்கும் உறவுகளே ...செயலிலும் உங்கள் வீரத்தை காட்டுங்கள் ..ஆட்சியமைக்க மட்டும் கையேந்தும் ஆட்சியாளர்களே தமிழை வாழவைக்கவும் தமிழ் அழியாமல் காக்கவும் மக்களிடம் கையேந்துங்கள் ..எட்டுகோடி தமிழர்கள் தமிழக மண்ணில் வாழ்கிறீர்கள் ..புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு கோடி தாண்டுமா தெரியவில்லை ..இவர்களால் ஒரு நாட்டில் தமிழர் சின்னங்களை  வெளியிட முடியும் என்றால் ? எட்டுகோடி மக்கள் இருக்கும் தமிழக மண்ணில் உங்களால் தமிழர் உரிமைகளுக்காக போராட முடியவில்லை என்றால் ..இதில் யார் வெட்கி தலைகுனிய வேண்டும் ..உங்களால் உங்களது இனத்துக்காகவும் உங்கள் சுகந்திரத்துக்காகவும்  போராட முடியவில்லை என்றால் ...மங்காத வீர பேச்சுகளுக்கு மட்டும் உங்கள் நேரத்தை வீணடிப்பது ஏன்...பிரான்ஸ் என்று ஆங்கில பெயருக்கு தமிழர்கள் மீது இருந்த அக்கறையும் மனிதாபி மானமும் ...தமிழகம் என்று தமிழ் பெயரையும் ,அறிவு ஜீவிகளையும்,சிறந்த படிப்பளர்களையும்,சிறந்த அரசியல் தலைவர்களையும்,சிறந்த பண்பாடும் கொண்ட ..தமிழினமே உங்களிடம் இல்லையா மனிதாபிமானம் உங்களிடம் இல்லையா  தமிழர்கள் என்று அக்கறை ?

கட்சிக்கு  கட்சிக்கு என்று அடிபடுகிராயே ..உனது தமிழர்கள் என்னும் கட்சி வாழவேண்டும் என்று நினைத்தாயா..மீண்டும் உயிர்பெற்று  உன் தமிழினத்தை காக்க வர மாட்டாய தமிழகமே? தமிழகத்தில் தமிழ் பற்றுகொண்ட ஒட்டுமொத்த தமிழர்களையும் நேசிக்கின்ற தமிழரின் விடிவிற்காய் போராடுகின்ற ஒரு உணர்வாளன் அவரை ஆட்சிபீடம் ஏற்ற மாட்டீர்கள் ..எவன் கொள்ளை அடிக்கிறான் ,எவன் தமிழை அளிக்கிறானோ, எவன் தமிழ் பண்பாட்டை சீரளிக்கிரானோ அவனையே அரசாணையில் ஏற்றும் மங்கிப்போன தமிழ் உணர்வுள்ள தமிழக மக்களே ..அடிக்கு மேல் அடிவாங்கியும் நாங்கள் தமிழர்கள் என்ற சிந்தனையும் மறந்து மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிப்பவர்கலையே  ஆட்சியில் அமர்த்துகிறாயே உனது தமிழுனர்வை எங்கே என்று போய் சொல்லுவது ? எனக்கு தெரிந்து ( 25  ) வருடங்களாக  தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் உலகத்தமிழ் மக்களுக்காகவும் போராடிவரும் அய்யா நெடுமாறன் ,அய்யா வைகோ எங்கே தமிழனுக்கு துன்பம் நேர்ந்தாலும் முதலில் ஓடிவந்து குரல்கொடுக்கும் இந்த மனிதர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை ..நீங்கள் உணர்வற்று இருந்தீர்கள் சரி எப்போது குருடாகவும் ஆனீர்கள் ?

மலர்ந்திருக்கும் இந்த வருடத்திலாவது தமிழக உறவுகளே உங்களின் கண்களை சற்று திறந்து விழித்து கொள்ளுங்கள்..உங்களுக்கும் எங்களுக்கும் நடந்து முடிந்த கொடுமைகளையும் ஈழ மக்கள் அனுபவித்த துயரங்களையும் உங்கள் மனங்களில் ஏற்றுங்கள் தமிழன் என்று தமிழர்கள் என்று உங்களின் கைபிடித்து என்றுமே நாங்கள் உங்களுடனே பயணிப்போம்..தமிழகத்தில் வாழும் தாய்மார்களே தந்தை மார்களே .உங்களின் பிள்ளைகளுக்கு படிப்போடு சேர்த்து தமிழர்கள் என்ற உணர்வையும் உட்டுங்கள் ..உயிரும்,  உரிமையும்,நாடும் இழந்த பின்பு படிப்பும், பட்டமும், பணமும் ,,எதற்கு ??? *சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை....  *நாம் துணிந்து போராடுவோம், சத்தியம்  எமக்குச்  சாட்சியாக  நிற்கின்றது,  வரலாறு எமக்கு வழிகாட்டியாக  நிற்கின்றது ...மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு உங்களின் துங்கி கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பிய ஆண்டாக அமையட்டும் ..தமிழா தமிழுக்கு மட்டும் செருப்பாய் இரு ..தரம்கெட்டவனுக்கு நெருப்பாய் இரு ...உன் தமிழ் மேல்  வை பற்று .. உன் தமிழை மிதித்தவன் தலையில் குட்டு...உன் தமிழரை உயிராய் மதி ..தமிழரை மிதித்தவன் தலையில் நீ மிதி ...உன் நாட்டில் நீ தலைவனாய் இரு ..நாம் ஆழப்பிறந்தவர்கள் பிறந்தவர்கள் ..அழிவதற்கு இல்லை என்பதை நீ உலகிற்கு சொல் .. இருப்பாய் தமிழா தமிழுக்கு தமிழர்களுக்கு செருப்பாய் 

(ஈழம் தேவதை)

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை