வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 26, 2012

சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி

 

உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….
யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு
குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது.
ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி.
கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் வசந்தம் வந்துவிடும் கவலைப்படாதீர்கள்.
2009 வன்னியில் நடைபெற்ற போரில் 140.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். குழந்தைகளும், முதியோரும், பெண்களும் துடிதுடிக்கக் கொல்லப்பட்டுள்ளார்கள். வைத்தியசாலையில் குண்டு வீசப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கட்டு மீறி நடந்துள்ளது. வெள்ளைக் கொடியோடு போனவர்களே சுடப்பட்டார்கள். இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை பேசாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு தமிழனாக இருந்தீர்களே.. இப்பொழுது எதற்காக வந்திருக்கிறீர்கள்..?
இது அந்த மாணவனின் கேள்வியின் உள்ளர்த்தம்.
இந்தியத் திரைப்பட கதாநாயகன் உடன் பிறந்த சகோதரி வில்லனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும்போது வரமாட்டான். அவள் அழிந்த பின்னர் புயலைக் கடந்துவிட்டாய்.. இனி உனக்கு வசந்தம்தான் என்று சென்டிமென்டாக பேசியபடியே வருவான். நமது அப்துல்கலாம் பேசிய வசந்தமும் இப்படிப்பட்டதுதான். புயலைக்கடந்தால் தென்றல் வரும் தென்றலைக்கடந்தால் புயல் வரும்.. தானாக நடப்பதற்கு கலாம் ஏன் வரவேண்டும்..?
மனது கேட்கிறது..
இதைவிட முக்கியம் கேட்கப்படாத நான்கு கேள்விகள் : அப்துல்கலாம் எங்கு சென்றாலும் மூன்று கேள்விகள் அல்லது ஐந்து கேள்விகளை கேளுங்கள் என்று மாணவர்களைப் பார்த்துக் கூறுவார். காரணம் இந்திய மாணவர்கள் அவரிடம் கேள்விகளை சரமாரியாக கேட்பதால் அப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போடுவார்.
ஆனால் இங்கோ… அவரிடம் கேள்வி கேட்கவே தேவையில்லாத நிலை.. இது அவருடைய பல்கலைக்கழக கேள்வி – பதில் வரலாற்றில் விழுந்துள்ள முதலாவது சவுக்கடி.
நான்கு கேள்விகளை மாணவர்கள் கேட்காமலே எழுந்து போய்விட்டார்களே காரணம் என்ன..? பல பதில்கள் உண்டு, அவற்றில் சில :
01. இவரிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது..
02. பத்திரிகையாளரை நுழைய விடாமல் அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டது. கேள்வி கேட்டால் நாளைக்கு கேட்டவரைத் தூக்க வெள்ளை வான் வரும்.. இதுதான் யாழ்ப்பாணத்தின் சீத்துவக்கேடு.. இராணுவ அச்சுறுத்தலுக்குள் இருக்கும் ஒரு சமுதாயம் கேள்வி கேட்கவே இயலாத நிலையில் இருக்கிறது. கேள்வி கேட்க நாலு பேர் இல்லாத ஒரு காட்டுத்தர்பார் அங்கே நடக்கிறது என்பதுதானே பொருள்..
அந்த கேட்கப்படாத நாலு கேள்விகளும் போதும் நாட்டு நடப்பை எடுத்து விளக்க..
ஐயா.. நீங்கள் இத்தனை நாளும் இங்கு ஏன் வரவில்லை.. மீண்டும் அதே கேள்வி.
மீண்டும் இன்னொரு முறை பதில்..
ஐயா.. நீங்கள் இங்கு வந்ததைவிட,
நீங்கள் செய்த அணுகுண்டை சிங்களவரிடம் கொடுத்திருந்தால் சந்தோசமாக தமிழர் மீது வீசிவிட்டு, நன்றிக்கடனுக்கு சீனாவுடன் உறவு கொள்ளாமல் இந்திய நலனைப் பேணியிருப்பார்களே..
ஆம்…
எங்கள் ஐயா…
உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வியல்ல ஐயா..

உங்கள் அணு குண்டைவிட சக்தி வாய்ந்த தமிழ் அணு குண்டு ஐயா.. ஒரு கேள்விக்கு ஆயிரம் அணுகுண்டைவிட அதிக வலு இருக்கிறது என்பதை படிக்க வேண்டுமானால் டெல்லிக்கு போகக்கூடாது யாழ்ப்பாணம் போக வேண்டும் ஐயா..
உங்களுக்கு கணக்கு படிப்பித்த யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார் கணக்குவிடவும் படிப்பித்திருக்கிறார் என்பதை உங்கள் புயல் பேச்சில் நாம் புரிந்து கொள்கிறோம்.. ஐயா.. அதே வாத்தியார்களிடம்தான் நாமும் கணக்கும், கணக்கு விடவும் படித்திருக்கிறோம் ஐயா..
வாழ்க இராமேஸ்வரம் அப்துல்கலாம்.
அலைகள்
———-
அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு: 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில் முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஈழம் வீவ் இணையம் 

 உறவுகளே இந்த  பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE   ) பகிருங்கள் என்னும் பகுதியை சொடுக்கி நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் 

 

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை