வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, January 18, 2012

நேற்று ஈழத்தில் தமிழினத்தை அழியவிட்டு வேடிக்கை பார்த்த தமிழகம் இன்று எட்டு தமிழர்களை காலடியில் கைவிட்ட கொடுமை!

  சொந்த ஊரில(புங்குடு தீவு) நிம்மதியாக வாழ முடியாது என்பதனை தமது வாழ்வில் உணர்ந்து கொண்டதனால் குடும்பத்தினருடன் தமிழகம் நோக்கி கடல்வழியாக படகில் சென்ற எட்டு ஈழத்தமிழர்களை நீதிமன்றக்காவலில் வைத்து இந்திய சட்டமும் தன் பங்கிற்கு வதைக்கின்றது என்றால் தமிழினத் தலைவர்கள் என்று சொலிலக் கொண்டு அரசியல் செய்பவர்கள் கண்டுகொள்ளாது இருக்கின்றமைதான் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.புங்குடு தீவுப் பகுதியில் வசித்துவந்த திருக்குமரன்(வயது29) என்பவர்
தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த வியாழக்கிழமை (05-01-2012) அன்று தமிழகத்திற்கு சென்ற வேளையில் இந்திய கடலோரக் காவல்படையினரால் கடலில் வைத்து கைது செய்யப்பட்டமையும் அதன்பின்னர் கடவுச்சீட்டு இல்லாமல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாலும் அவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் 15 நாட்கள் காவலில் வைக்க அறந்தாங்ங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஈழத்தமிழர்களிற்கு எதிரான இந்திய மத்திய அரசின் போக்கை வெட்டவெளிச்சமாக்கியிருக்கின்றது.
தமிழக மீனவச் சகோதரர்களை சிங்கள கொலைவெறி இராணுவம் தமிழக கடற்பரப்பிற்குள் நுழைந்து அடித்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தும் அதற்குமேல் கொலையும் செய்து திரும்பும்வரை வேடிக்கை பார்த்திருக்கும் இந்திய கடலோரக் காவல்படை தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வந்த தொப்புள்கொடி உறவுகளை கைது செய்து சோனியா விசுவாசத்தை காட்டியுள்ளமை ஒன்றும் ஆச்சரியாமான விடையம் இல்லை.
ஆனால் இந்த துரோகத்தை தமிழகத்தில் உள்ள தமிழின ஆதரவாளர்களாக தம்மை இனம்காட்டிக் கொண்டிருக்கும் தமிழ்தேசியவாதிகள் காண்டு கொள்ளாது இருப்பதானது இந்தியத் துரோகத்திற்கு சற்றும் குறைவில்லாததாகவே உள்ளது.
வன்னியில் போர் உக்கிரம் அடைந்த போதும் தொப்புள் கொடி உறவுகளான எட்டுக் கோடி தமிழக சொந்தங்களையும் உலக மாமன்றங்களையும் அமைப்புகளையும் நம்பிக் காத்திருந்து முள்ளிவாய்காலில் எமது உறவுகள் மாண்டுபோன போதும் இன்றும் விடிவு கிடைக்காது முள்வேலி முகாமில் வதைபட்டுக் கொண்டு எமது மக்கள் வாடிக் கொண்டு இருக்கின்றபோதும் ஓங்கிக் குரலெடுத்து நீங்கள் ஆர்பரித்தீர்கள் இல்லை என்று சொல்லவில்லை.
தற்போது உங்களிடத்திற்கு தஞ்சம் தேடிவந்த எட்டு ஈழத்தமிழர்களை சட்டத்தின் துணைகொண்டு சிறையில் அடைத்துள்ள போது நீங்கள் ஏன் எதற்கு என்று கேள்விகேட்காது கண்டுகொள்ளது இருப்பதன் மூலம் இதுவரை ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுத்துவந்தமை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உங்களால் முன்னெடுக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது.
தஞ்சம் தேடிவந்தவர்கள் தமிழக மண்ணில் கால்பதிப்பதற்கு முன்னரே கைது என்ற வளையத்திற்குள் முடக்கி நீதிமன்றப்படியேற வைத்து தனிமைச் சிறைவாசத்தை வழங்கி ஒருவாரமாகப் போகும் இன்றைய நாள் வரை நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அண்ணனின் குரல்தவிர வேறு எவருடைய குரலும் ஒலிக்கவில்லை என்பதுடன் யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பதுடன் பெரும்பாலன தலைவர்கள் இது தொடர்பான தகவல்களை அறிந்திருக்வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
உங்கள் மண்ணில் உயிர் பிழைத்தால் போதும் என்று படகேறிவந்தவர்களை ஏன் என்றுகூட திரும்பிப்பார்க்காத உங்களது கடந்த காலச்செயற்பாட்டை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரே ஒரு ஆறுதலான விடையமாக அறந்தாங்கி வழக்கறிஞர்கள் பதினைந்திற்கு மேற்பட்டவர்களது இனப்பற்றுதான். வழக்கு விடையத்திற்காக அறந்தாங்கி நீமன்றத்திற்கு குறித்த எட்டு ஈழத்தமிழர்களும் அழைத்துச் செல்லப்பட்ட போது என்ன ஏது என்று பார்க்காது முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்துள்ளனர்.
பா.திருக்குமரன் அவரது மனைவி ரதிமலர்(வயது28) நிதர்சன்(21) அவரது மனைவி மேரிசூசன்(19) ஜேசுதாசன்(22) உள்ளிட்டோரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும் திருக்குமரன் ரதிமலர் தம்பதிகளின் மகள்களான ராதிகா(9) நிவேதா(7) ஆகியோரை திருச்சியில் உள்ள சீர்திருத்தப் பள்ளயில் சேர்க்கும்படியும் இந்த வழக்கை விசாரித்த அறந்தாங்கி குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்லவம் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து அறந்தாங்கி வழக்கறிஞர்கள் பதினைந்திற்கு மேற்பட்டவர்கள் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுமீதான விசாரனை நேற்று செவ்வாய்கிழமை விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்திய கடலோக்காவல்படையினரால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அறியமுடிகின்றது. தொடர்ந்தும் இந்த வழக்கறிஞர்கள் அணி ஈழத்தமிழ் உறவுகளை இந்திய சட்டத்தின் பிடியில் இருந்து
மீட்டெடுக்கப் போராடிக் கொண்டு இருப்பதாக கிடைக்கும் செய்திகள் உண்மையில் மனதிற்கு ஆறுதலாகவே உள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஸ் கண்ணன் என்பவர் கூறுகையில்… இதுவரை தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களை அவர்களுக்கான முகாம்களில் மட்டுமே தங்கவைக்கப்பார்கள். தற்போது முதல் முறையாக நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது வேதனை அளிக்கின்றது என்றார்.
எட்டுக் கோடி தமிழர்களில் தொப்புள்கொடி உறவுகளிற்காக சட்டத்துடன் போராட இந்த பதினைந்து வழக்கறிஞர்கள்தான் முன்வந்துள்ளார்கள் என்பதனை பார்க்கும்; போது வன்னியில் யுத்தம் தீவிரமடைந்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது முத்துக்குமார் தொடங்கி 16 தமிழக சகோதரர்கள் தமது உடலில் தீமூட்டி சத்திய வேளிவி நடாத்தியதை நினைக்கத் தோன்றுகின்றது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைக்கோ… உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஜய்யா பழ.நெடுமாறன்… உள்ளிட்ட தீவிர தமிழ்த்தேசியத் தலைவர்களும் அந்தத் தளத்தில் பயணிப்பதாக காட்டிக் கொண்டிருக்கும் தொல்.திருமாவளவன்… ராததாசு ஜய்யா… போன்றவர்கள் இந்த விடையம் தெரிந்திருக்க வில்லை என்பதையே அவர்களது செயற்பாடு புலப்புத்துகின்றது.
இந்த சம்பவம் நடந்தேறி ஒரு வாரமாகப் போகின்ற நிலையில் தமிழகத்தில் பல பத்திரிகைகளிலும் வார இதழ்களிலும் இது தொடர்பாக செய்திகள் வந்துள்ள போதிலும் இவர்கள் இது தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்றால் அறியாமை என்பதா…!? அக்கறை இல்லை என்பதா…!?
உங்கள் காலடி இடம் தேடி வந்தவர்களை கைவிட்டு வேடிக்கை பார்க்கையில் எம்மால் இப்படிக் கூறாமல் எப்படித்தான் கூற முடியும்? இன்னும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. உடனடியாக யாராகினும் தலையிட்டு சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக துன்பத்தை அனுபவிக்கும் எமது உறவுகளை இந்திய கொலைகார கரங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்கள் சார்பில் ஈழதேசம் இணையத்தளம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
இந்த பிரச்சினையில் இதுவரைகாலமும் கடைப்பிடிக்கப்படும் முறைக்கு மாற்றாக கைது நீதிமன்ற விசாரனை சிறைவாசம் என தொடரும் சிங்களத்தின் இன அழிப்பின் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளிற்கு பின்னணியில் இந்திய மத்திய அரசுதான் இருப்பதாக எமக்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.
இதில் தமிழக அரசின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதனை அறியமுடியவில்லை. இருப்பினும் தமிழக மக்களுடன் மக்களாக ஏதிலிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமழிர்களை கருதி தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை அவர்களிற்கும் வழங்கி தாயுள்ளத்தோடு செயற்பட்டுவரும் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இதுவரை இந்தவிடையத்தில் கவனம் செலுத்தாது இருப்பதானது எம்மை ஐயங்கொள்ள வைக்கின்றது.
இந்த இக்கட்டான நிலைமையில் அடுத்து நடைபெறும் நிகழ்வுகளே வரலாற்றில் சாட்சியாக நிலைத்து நிற்கப் போகின்றன.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(11-01-2012)

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை