வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 26, 2012

விடுதலைக்கான உணர்வு செயல்வடிவில்

 

மேற்கு நாட்டில் பிறந்து வாழ்பவர் என்ற முறையிலும், இத்தாலி (பாசிச ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது), இந்தியா (காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது), தென் ஆபிரிக்கா (இன வேறுபாட்டிலிருந்து விடுதலை பெற்றது) போன்ற பல தரப்பட்ட நாடுகளுக்கு பிரயாணம் செய்தவர் என்ற முறையிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்களின் 50வது பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் செய்தி கொடுப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

எனது இதயத்திலிருந்து சொல்லப்படும் எந்த உண்மைகளையும் நான் மறைக்க விரும்பவில்லை. இத்தாலிய நாட்டின் நவீன சரித்திரத்தில், சர்வதிகாரி முசோலினியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது உள்ளடக்கப்பட்டுள்ளது. இத்தாலிய நாட்டின் பிரபல்யமான கலாச்சாரத்தில், சரித்திரத்துவம் வாய்ந்த விடுதலை பாடல்களாகவும், சித்திரங்களாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டம் பெரும் விடுதலை அமைப்பினால் உலகம் பூராகவும் கட்டுரைகள், திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்பெற்றது.
இது சாத்வீகப் போராட்டம் என்று கூறப்பட்டபோதும் விடுதலைக்காக இரத்தம் சிந்தப்பட்டது.  தென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டம் அங்கு நீதி, சமத்துவம், சகலருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் விடுதலை பெற்றது. திரு பிரபாகரன் அவர்கள் தனது 50வது பிறந்த தினத்தை கொண்டாடும் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஓர் வேறுபட்ட நிலைமையை என்னால் காணமுடிந்தது. அங்கு விடுதலைக்கான செயற்பாடுகளை உணரக்கூடியதாக உள்ளது.
நிலைநிறுத்தக்கூடிய நன்றாக திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப வேலைப்பாடுகள், ஏழ்மைநிலை மேன்மைப்படுத்தும் திட்டங்களான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான போசாக்கு திட்டங்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான பல திட்டங்கள், போரினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கான திட்டங்கள், நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுபோன்றவை அடங்கும்.
இருபது வருடகாலம் யுத்தத்தினால் இரத்தக்களரியான இத்தீவுக்கு, நான் நான்கு தடவை மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரையும்-மட்டக்களப்பு, திருகோணமலை, மலைநாடு உட்பட விஜயம் செய்துள்ளேன். அங்கு பல தரப்பட்ட மக்களையும் கண்டு உரையாடியுள்ளேன்.
நான் அங்கு வடக்கு கிழக்கில் கண்டவற்றை ‘அரசாங்க கட்டுப்பாட்டு பகுதி’  ஆகியவற்றை ஒத்துப் பார்க்கத் தூண்டியது. இப்பகுதிகளினிடையே உள்ள பெரும் வித்தியாசங்களை ஒருவர் கவனிக்கக் கூடியதாக உள்ளது. திரு. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர், பெண்கள், காயப்பட்ட போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் அரசாங்கத்தின் எந்த உதவியுமின்றி, மிகவும் அவதானமாக கவனிக்கப்படுகிறார்கள்.
இதை நான் மட்டுமல்ல என்னைப் போன்று அங்கு விஜயம் செய்த பல மேற்கு நாட்டவர்கள் இவர்களின் வெற்றிகரமான பராமரிப்பு முறைகளைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். திரு. பிரபாகரன் அவர்கள் ஓர் தேசத்தை உருவாக்குவதில் மிகப்பெரிய நடவடிக்கைகள் கலை, கலாச்சாரம், சித்திரம், சமயம், சம உரிமை, கல்வி, நீதி போன்ற மனித வாழ்வுக்கு வேண்டிய விடயங்களை மனதில் கொண்டு எடுத்துள்ளார் என்பதை நான் அங்கு கண்டவற்றைக்கொண்டு சொல்வதில் எந்தத் தயக்கமும் அடையவில்லை.
அத்துடன் அங்கு ஓர் நல்ல நீதி நிர்வாகம் நடை பெறுகின்றது. பொலிஸ், சுதந்திரமான நீதித்துறை மக்களின் முழு ஆதரவுடனும், பெண்கள் முக்கிய பதவிகள் வகிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஐம்பது வருடகால தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள், அடக்குமுறைகள், நீண்டகால சாத்வீக போராட்டங்கள் இரக்கமற்ற முறையில் அடக்க எத்தனித்ததால் உருவான யுத்தம், யாரும் உண்மையை ஏற்றார்களோ இல்லையோ, அங்கு ஓர் தேசம் உருவாகியுள்ளது. மக்களுடைய தேவைகள் ஏற்ற முறையில் நிறைவு செய்யப்படுகிறது.
இங்கு உருவாக்கப்பட்டுள்ள தேசம் இம் மக்களின்  தேவைகளை திருப்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் மேற்கு நாடுகளின் எண்ணங்களை பிரதிபலிப்பதற்காக அல்ல. கொழும்பு பத்திரிகைகள், மேற்கு நாட்டு பத்திரிகைகள், இணையத் தளங்கள் தாம் வேண்டியதை கூறலாம். ஆனால் வடக்கு கிழக்கில் பல பாகங்களுக்கும் தென்பகுதிக்கு விஜயம் செய்தவர் என்ற முறையில் என்னால் கண்டவற்றை வைத்து திரு பிரபாகரனின் வழிகாட்டலில் நடைபெறுபவை பற்றி கூறியுள்ளேன்.
மீண்டும் உலகின் இந்த வெற்றிகரமான விடுதலைப் போராளிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். திரு. பிரபாகரன் அவர்கள் சுகநலமாக வெற்றித் திருமகனாக நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஐக்கிய இராச்சியம்
24 ஐப்பசி 2004
டியற்றி மக்கொனல்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
பிரித்தானியா.

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை