வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 21, 2012

காற்று வெளியில் கத்தியை சுழட்டும் அப்துல் கலாம்

  பள்ளிக்கூடம் வியாபார நிறுவனமாக இருக்கக் கூடாதாம்…!

படித்தவன் பாவம் செய்தால் ஐயோ ஐயோ என்று போவானாம் – பாரதி சொன்னவை. நன்கு படித்து பாப்புலர் விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் ஆன டாக்டர் ஏ..பி.ஜெ.அப்துல் கலாம் இந்தியாவின் அறிவு ஜீவியாகவும்,
நேர்மையாளராகவும், இந்திய குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வேறு வழியே இல்லாமல் களவானிகளின் ஊடகங்களால் முன் நிறுத்தப்படுகிறார், கொஞ்ச நாட்களாக காங்கிரஸ் பெருச்சாளிகளின் அரசு, ஏ..பி.ஜெ.அப்துல் கலாமை கூப்பிட்டு, தமிழக பிரச்சனைகளுக்கு கருத்து சொல்லுமாறு அறிவுரை வழங்கியவுடன், கலாமும் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, காங்கிரஸ் பெருச்சாளிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு விஞ்ஞான கருத்துஸ்களை சொல்லிக்கொண்டே போகிறார், கூடன்குள மக்களும் முல்லைப் பெரியாறு மக்களும் கேட்க மறுக்கிறார்கள் இவரின் விஞ்ஞான கருத்துக்களை, இவரின் விஞ்ஞானத்தை கேட்டால் தங்களின் கோவணம் அல்லாவா பறிபோய்விடும் என்று சரியாக புரிந்து கொண்டதினால்.
டாக்டர் ஏ..பி.ஜெ.அப்துல் கலாம் கொஞ்ச நாட்களுக்கு முன் கூடங்குளம் வந்தார், உள்ளே சுற்றிப் பார்த்து விட்டு, அணு உலைகள் எல்லாம் நன்றாக பாதுகாப்பாக உள்ளது என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டு, இந்த மக்களுக்கு ரூபாய் 200 கோடியில் ஆஸ்பத்திரி மற்றும் சாலைகள் போட்டு கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார், அதாவது போராடும் மக்களுக்கு லஞ்சம் கொடுங்கள் என்று அதற்கு அர்த்தம். வைக்கோ அவர்கள் இந்த பெரிய மனிதர்கள் எல்லாம் தமிழக மீனவன் கொல்லப்படும் போதும், ஈழத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள்..? என்று கேட்டதற்கு, அந்த கேள்வி யாருக்கோ எவருக்கோ…? கேட்ட கேள்வி போன்று இன்று வரை வாய் மூடி இருக்கிறார். கேட்டால் ‘அதுதான் விஞ்ஞானம்’ என்று கவுண்டர் பாணியில் பதில் சொல்ல தயங்க மாட்டார்கள். சங் பரிவார் கூட்டம் இவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் தான் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்களை நர வேட்டையாடினார்கள். அப்போது தனது வாயில் பெரிய பிளாஸ்திரியை போட்டுக் கொண்டு, 2020 – ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கனவு காண சொன்னார்.
பொருளாதார அறிவுஜீவியான டாக்டர் மன்மோகன் சிங் எவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழலே நடைபெறவில்லை என்று அடித்து சொன்னாரோ, அதேபோன்று விஞ்ஞானி அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டிற்கு நல்லது என்கிறார், போன வாரம் ஒரு கருத்து சொன்னார், அதாவது கூடன்குள அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும், அணு உலைக்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய வேண்டும். இல்லையேல், நாடு முழுதும் அணு உலைக்கு எதிரான கருத்துக்கள் பரவி விடும் ஆபத்து உள்ளது என்றார். எப்படி இருக்கிறது அப்துல் கலாம் விஞ்ஞானம் ..? உலகே இன்று அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது, அதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் கிடையாது இந்த கருத்து சொல்லும் விஞ்ஞானிக்கு. மக்களும் ஏன் இவர்களின் கருத்துக்களை நம்புகிறார்கள்..? பொருளாதார அறிவாளி டாக்டர் மன்மோகன் சிங் குறித்து, இன்றைய நிலையில் இந்திய மக்கள் அனைவரும் பெரிய கோமாளியை கொண்டு போய் பிரதமராக ஆக்கி இருக்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்க சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
அதேபோலத் தான், விஞ்ஞானி அப்துல் கலாமையும் தமிழக மக்கள் பெரிய கோமாளியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், இந்த லட்சணத்தில் மகிந்தா ராஜபக்சே கும்பல் இந்த ஆண்டில் நடைபெறும் மும்மொழி திட்டத்திற்கு இவரை அழைத்து இருக்கிறார்கள்.மேற்கண்ட தலைப்பில் நேற்று ஜெய்ப்பூரில் அம்மக்களுக்குத் தான் இவ்வாறு கருத்து சொல்லி உள்ளார். அதாவது கல்வி நிறுவனங்கள் வியாபாரா நிறுவனமாக இருக்கக் கூடாது என்று, யாரிடம் கூறினார்..? தமிழ் நாட்டில் பெரும் பெரும் வியாபாரக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தி.மு.க. கும்பலைப் பார்த்து அல்ல, மு.க.வின் குடும்பத்தைப் பார்த்து அல்ல, இந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கும்பல்கள் நடத்தும் வியாபாரக் கல்வி நிறுவனங்களை பற்றி இவ்வாறு கருத்து சொல்லி இருந்தால் நெஞ்சார வாழ்த்தி இருப்பார்கள் தமிழக மக்கள்.
இந்த மேற்கண்ட கல்வி வியாபாரம் நடத்தும் கும்பல்கள் குறித்து கருத்துக்களை சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும்..?திறந்த
வெளியில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்து கூறிய கருத்துக்களுக்கு வெட்ட வெளி எவ்வாறு எதிர்வினை ஆற்றும்..? பேச்சு பேச்சாத் தான் இருக்கும் என்று நன்கு அறிந்து கொண்ட டாக்டர் ஏ..பி.ஜெ.அப்துல் கலாம் இவ்வாறு போகிற இடமெல்லாம் கருத்துக்களை போட்டு விட்டுச் செல்கிறார். இந்திய அரசு அங்கீகரிக்கும் அறிவு ஜீவிகள் அல்லது நன்கு கற்றறிந்த இந்திய அறிவாளிகள் அரசின் அடியாட்களாக இருப்பார்கள் என்பதற்கு மன்மோகன் சிங், கலாம், அலுவாலியா என்று பட்டியலை நீட்டித்துக் கொண்டே செல்லலாம்.
வீட்டுக்கு ஐந்து மரம் வளருங்கள், சுற்றுச் சூழல் மாசு படாது என்று வேறு கூறியுள்ளார் கலாம். இவரை நம்பி நடிகர் விவேக் நாங்கள் ஒரு கோடி மரம் நட்டுவிட்டோம் என்று சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். மரம் நட்டுவிட்டால் சுற்றுச் சூழல் மாசுபடாது என்றால் பின் எதற்கு கோபன் ஹேகன், டர்பன் மாநாடெல்லாம்..? சும்மா வேலை வேட்டி இல்லாமல் உலகில் இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் கூத்து கொண்டாட்டம் என்று கூடுவதற்கா..? அமெரிக்க அரசு உலகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் அய்யா உங்கள் நாட்டில் உள்ள தலைக்கு ஒருவருக்கு ஐந்து மரங்கள் நட்டு விடுங்கள், கார்பன் மொனாக்சைடு எல்லாம் காற்றில் பறந்து விடும் என்று சொல்லி இருக்கலாமே..! சரி போகட்டும், எழுதிய தலைப்பிற்கு வருவோம்.
அடியாட்கள் என்றால் சைக்கிள் செயின், கத்தி, கடப்பாறை என்று வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, கருத்துக்களை சொல்லுபவர்கள் கூட இந்தப் பட்டியலில் இணைத்து கொண்டுள்ளது கார்பரேட் அரசுகள். எனவே சம்பளம் மட்டுமே பெறும் நேர்மையான அரசின் அடியாட்களாக இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளைக் கூடிய விசயம் அன்றி வேறெதுவுமில்லை.

மாயாண்டிக்கருப்பு

நன்றி  ஈழதேசம் இணையம்..

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை