Wednesday, January 25, 2012
விடுதலையின் வழிகாட்டி
எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து
முள்ளிவாய்க்காலையும் நந்திக்கடலையும் மறக்க முடியாது -ஈழக் கவிஞர் தீபச்செல்வன்
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக
Tuesday, January 24, 2012
இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம்-02
உடையார்கட்டு தொடக்கம் முல்லைத்தீவின் பல பகுதிகளும் சனநெரிசலால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தன. மனிதர்களின் ஆக்கிரமிப்பு அனர்த்தங்கள் போதாதென்று இயற்கையும் மக்கள்மீது சீறி விழுந்தது. காற்றும் மழையும் வந்து மக்களின் தறப்பாள்களை குதறி எறிந்தன. பகலும் இரவுமாக கொட்டிய மழை பெருவெள்ளமாகி குடிசைகளை எல்லாம் அடித்து விழுத்திக்கொண்டு பாய்ந்தது.போகிற நான் ஏன் சும்மா போகவேண்டும் என்ற குருட்டு நியாயத்துடன் வீதியோரம் ஒதுங்கிய மனிதர்களைக்கூட வாரியிழுத்து வீழ்த்தி தனக்குள் சுருட்டிக்கொண்டு பாய்ந்தது. பலபத்துப்பேர் வெள்ளத்திலும் மாண்டுபோனார்கள். பாரிய மரங்கள்கூட வேரோடு பாரி வீழ்ந்தன. அதுவும் தன் பங்குக்கு சிலரை கொன்றுபோட்டது.
Monday, January 23, 2012
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்
ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.Sunday, January 22, 2012
இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம் 01
என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின்உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில்வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும்என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன்.நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான்.எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி......
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து
Saturday, January 21, 2012
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 10 (இழப்புக்கள் வழி நம்பிக்கை பெறுவோம்)
s22_18442103ஆயுள் நிறைந்தவைகள் அனுபவவங்கள். முழுமையற்ற பூமியில் குடத்தில் தண்ணீர் அள்ளி, ஒவ்வொரு மிளகாய்ச் செடியின் அடிப்பகுதியிலும் ஊற்றிய அனுபவம், போதுமான வாய்ப்புக்களின்றி தடுமாறுகையில் கைகொடுக்கிறது. கல்லில் இடறிய காலில் இரத்தம் வந்தபோது எச்சிலால் மருந்திட்டோம். முன்னேறுவதற்கு எல்லாமே வாய்ப்பாகும் என்பதற்கு இன்று இதுவே முகவரியாகின்றது. பேச்சுக்குரலை ஒலிபரப்பாத Friday, January 20, 2012
தலைவர் பிரபாகரன் தொடர் 10
ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.Thursday, January 19, 2012
1989-முதல்-1996-வரையான மாவீரர் தின உரைகள்
அன்பான உறவுகளே எமது விடுதலை போரட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை நாம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றோம் ..அந்த வகையில் எமது தமிழ் தேசியத்தின் தலைவரும் தமிழ் மக்களின் தந்தையும் ஆகிய தேசியத்தலைவர் அவர்கள் (89 ) முதல் (96 ) வரை ஆற்றிய மாவீரர் உரையினை ஒரே இடத்தில் தொகுத்து உள்ளோம் ..இந்த மாவீரர் தின உரையினை நீங்கள் செவிமடுப்பதன் முலம் சில உண்மைகளும் புரியாத புதிருக்கும் விடை காணலாம் ...தலைவர் அவர்களின் ஒவ்வொரு வருட உரையிலும் புதைந்து கிடக்கும் விடைகள்
வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-7
எங்கோ சுற்றுலா சென்ற இடத்தில் ஐந்து நிமிடங் களோ, பத்து நிமிடங்களோ மனைவியைக் காணவில்லை என்றால், உங்கள் மனம் எப்படித் துடித்துப்போகும்? பொருட்காட்சித் திடலில் விரல் பிடித்து வந்த குழந்தை திடீரெனக் கூட்டத்தில் தொலைந்தால் உங்கள் மனம் எப்படியெல்லாம் பதைபதைப்பு அடையும்?ஆனால், இன்று குடும்பமே திசைக்கு ஒன்றாகக் கிழிந்துகிடக்க, கணவன் எங்கே; மனைவி எங்கே; பிள்ளைகள் எங்கே என்று ஆண்டுக்கணக்காகத் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது ஈழச் சமூகம். அதன் வேதனை எப்படி இருக்கும்?
பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு!

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.
தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்?
இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சிமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை
குட்டித் தீவில் குமுறல்கள் ……-05
தமிழரின் பலம் அழிக்கும், நிலப் பறிப்பு!
நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர், விடுவிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது சுமார் 70,000 தமிழர்கள் வாழ்வதாகவும், அதே சமையம் அங்கு ‘பாது காப்புக் கருதி’(?!) நிலை கொண்டிருக்கும் ‘சிங்கள’ அரசபடையினரின் எண்ணிக்கையும் எழுபதாயிரத்தை எட்டும் எனவும் ,ஓர் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.ஒரு தமிழ்க் குடிமகனுக்கு ஓர் அரசுப் படையினரைப் பாதுகாவலாக அனுப்பி வைத்திருக்கும் இன்றைய இலங்கை அரசின் பெருந்தன்மையைப்(!) பாராட்டுவதா, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்னும் ‘போர்வை’யில்; முன்பு விடுதலைப் புலிகள் வசம்
Wednesday, January 18, 2012
நேற்று ஈழத்தில் தமிழினத்தை அழியவிட்டு வேடிக்கை பார்த்த தமிழகம் இன்று எட்டு தமிழர்களை காலடியில் கைவிட்ட கொடுமை!

சொந்த ஊரில(புங்குடு தீவு) நிம்மதியாக வாழ முடியாது என்பதனை தமது வாழ்வில் உணர்ந்து கொண்டதனால் குடும்பத்தினருடன் தமிழகம் நோக்கி கடல்வழியாக படகில் சென்ற எட்டு ஈழத்தமிழர்களை நீதிமன்றக்காவலில் வைத்து இந்திய சட்டமும் தன் பங்கிற்கு வதைக்கின்றது என்றால் தமிழினத் தலைவர்கள் என்று சொலிலக் கொண்டு அரசியல் செய்பவர்கள் கண்டுகொள்ளாது இருக்கின்றமைதான் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.புங்குடு தீவுப் பகுதியில் வசித்துவந்த திருக்குமரன்(வயது29) என்பவர்
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 09 (வரலாற்றை மறக்காத இனத்திற்கு வெற்றி நிச்சயமே!)
Subscribe to:
Posts (Atom)






