வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 17, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் -9

1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.
`தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்’ – பாலசிங்கம்

[குட்டித் தீவில் குமுறல்கள் -பகுதி-04]சட்ட சபையில் சரிபாதி இழந்தோம்!

ஈழப் போராட்டம், அரசியல் தளத்திலிருந்து ஆயுதப் போராக உருவான  1980 களின் ஆரம்பத்தில்  மலேசியாவில் எனது அரசியல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போது அந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி…
” ஏன் சார் நீங்கள் இலங்கையில் சிங்களவர்களுடன் போரிட்டுக் கொள்கிறீர்கள்…? நாங்கள் இங்கு வாழ்வது போல் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழலாம்

Monday, January 16, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-6

 

ன அழிப்பு அரசாங்கம், கொடிய மனம்கொண்டு தன் மக்களை அழிப்பதையே தொழிலாகக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம், மெனிக் ஃபார்ம் முகாம்!
ஹிட்லரின் இன அழிப்புச் சித்ரவதை முகாம்களுக்கும் ராஜபக்ஷேவின் சித்ரவதை முகாம்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஹிட்லரின் கொடுமைகளை அறிந்துகொள்ள, அன்றைய சித்ரவதைக் கூடத்தில் வதைபட்ட கதை ஒன்றை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
சித்ரவதை அடக்குமுறைத் தாக்குதலால், அந்தப் போராளியின் நாடித் துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், சித்ரவதைக்குத் தலைமை ஏற்று

Saturday, January 14, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 8

 


என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு?
எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு

தந்தை செல்வா, அன்றே சொன்னார்….![ குட்டித்தீவில் குமுறல்கள்....... பகுதி-03]

“சர்வசித்தன்”

உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!
ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..
இறைவன் மீது பக்தி கொண்டு,  அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……
“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Y-ON_ncgGsosk8kpw8yOpyv2X0-UYwV2D-3NYORWPiDIV9Lk2H-RC8ftVsUX2jBXNGdmUOSlbmz7wEPZ7yn038V4OAqu8Rxia46_aur_48iovIZ2OBLgN_LbXH7Jx4FNIh99x806-UF8/s1600/Tamil+new+year.JPGஎமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)

 

குழந்தைகளின் உலகம் உன்னதமானது. கத்தி ஆர்ப்பரித்தாலும் கண்ணீரின்றி அழுவார்கள். அன்போடு அழைக்கும் பகைவர்களையும் நம்பிச் செல்வார்கள். கொஞ்சமாய் இருந்தாலும் நெஞ்சம் நிறைந்து மகிழ்வார்கள். சின்னச் சின்ன கீறல்களையும் தடுமாற்றங்களையும் மறந்து உற்சாகம் தருவார்கள். மழலை மொழியில் இறைவனின் குரலொலி இசைப்பார்கள். குழந்தைகள் இருந்தால் இரைச்சல் இன்னிசையாகின்றது. சிந்தும் உணவுகள் ரங்கோலியாகின்றது. அவர்களது சேட்டைகள் கூட நகைச்சுவை நாடகமாகின்றது.

Friday, January 13, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 7



உடனே சென்னைக்குச் செல்லவும்..

யாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில்

Thursday, January 12, 2012

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!-02

 மகாவம்சமும்; மகிந்தவின் தமிழினத் துவம்சமும்!

“சர்வசித்தன்”
சுதந்திர இலங்கையின் ஒன்பதாவது வருடத்தில் (1957 ல்); ஈழத்தமிழர்களது அரசியல் கோரிக்கைகளில் சிலவற்றையேனும் வழங்கும் வகையில்; தமிழர்களது தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; அதிக தொகுதிகளில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன், ஓர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகா.

கப்டன் பண்டிதர் வரலாறு

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் அத்திவாரத்தின் ஒரு தூன் .கடமையுணர்வு கடும் உழைப்பு இலட்சிய பற்று என்பவற்றோடு தமிழ் மொழி மீதும் பண்பாட்டின் மீதும் அளவுகடந்த பற்று கொண்டவர் அதையும் கடந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் துணைத்தளபதியாக அல்லும் பகலும் செயற்பட்ட வீர மறவன் "கப்டன் பண்டிதர்"

""பண்பாட்டுக்கு இசைவாக பண்பாடு தமிழிசை பண்பாடு.தமிழன் வரலாற்று வரிகளையே நீ பாடு வீர வரலாற்று வரிகளையே நீ பாடு"""

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -5

 

முள்ளி வாய்க்காலில் இருந்து தன்னந்தனியாக தனது ஆண் குழந்தையைச் சுமந்து வரும் பெண்ணுக்கு அவளது குழந்தையைப் பாதுகாப்பது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. யாராவது காப்பாற்றி குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க மாட்டார்களா என்று அலை பாய்கிறாள். ஆனால்,  குழந்தையைப் பிரித்து அனுப்ப, அவள் மனம் ஒப்பவில்லை. இத்தனை நாட்களாக, தான் அடைந்த துன்பங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம். அந்த நேரத்தில் முள்வேலிக்கு அப்பால் இரண்டு கண்கள் தன்னையே

Wednesday, January 11, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 6

ரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று

Tuesday, January 10, 2012

நீங்கள் இன்னுமொரு முறை இதை கேளுங்கள் கடைசியுத்தம் பற்றி

கடைசி யுத்தம் பற்றி மீண்டும் ஒரு முறை நீங்கள் கேட்பது சிறந்த ஒன்று .இப்பொழுது தாயாக விடுதலைப் பணி முற்றுமுழுதாக புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்க பட்டு உள்ளது ..தாயகத்தில் முள்ளு கம்பிகளுக்கு பின்னால் நின்று ஏக்கத்தோடு உக்களை பார்க்கும் தொப்பிள்கொடி உறவுகளின் துயர்துடைக்க புலம்பெயர் உறவுகளே தயாராகுங்கள் ..தலைவன் வருவான் துயர் விடுங்கள் ..உங்களிடம் ஒப்படைக்க பட்டுள்ள பொறுப்பினை செவ்வனவே செய்ய உறுதியெடுங்கள்

உப்பில் உறைந்த உதிரங்கள் ஈழ திரைப்படம்


யாழ் கிளாலி கடல்நீரேரி பகுதியில் (26.02.1998 ) அன்று தரித்துநின்ற நீருந்து விசைப்படகை "கடல் கொமாண்டோக்கள் "உடுருவி கைப்பற்ரிவரும் நோக்குடன் சென்ற திட்டம் நிறைவேறாத சந்தர்பத்தில்
அந்த நீருந்து விசைப்படகிர்க்கு என்ன நடந்தது? மீண்டும் அத்திட்டத்திற்கு அமைய கடற்படை தளத்தினுள் வெற்றிகரமாக நுழைந்து விசைப்படகை கைப்பற்றுகின்ற
உண்மை சம்பவத்தை தழுவியதாக அமைகின்றது இத்திரைப்படம்.யாழ் கிளாலி கடல் நீரேரியில் வீரகாவியமான கடல் மறவர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் ..

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை-1

தொடரினுள் புகு முன் சில வார்த்தைகள்…..

[சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், மலேசியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் “குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் ஈழத் தமிழர்களது அரசியல்-ஆயுதப் போராட்டம் குறித்த எனது கட்டுரைத் தொடர் வெளியாகி இருந்தது. 1986 ஆம் ஆண்டு அது ,நூலாகவும் வெளியீடு கண்டது.

Monday, January 9, 2012

கடலோர காற்று முழுநீள ஈழ திரைப்படம்


கடற்புலிகளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி கடற்புலிகள் நிதர்சனம் இணைந்து தயாரித்து .(2002 ) ஆண்டில் வெளிவந்த கடலோர காற்று முழுநேர திரைப்படம் ..இது திரைப்படம் மட்டுமல்ல ஈழ தமிழ் மக்களின் வலிகளை சுமந்த வரலாறும் என்றும் சொல்லாம் ..வரலாறுகள் மீட்டி பார்க்கவேண்டியது எமது கடமை ..எமது மக்களினதும் போராளிகளினதும் வலிகள் சுமந்த வாழ்வினை காணுங்கள்

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -4


சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம்

Sunday, January 8, 2012

கிட்டு மாமா நினைவில் இணைந்திருப்போம்


கிட்டு மாமா. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் பரவும் உணர்வலைகளை விவரிக்கவோ, மகிழ்ச்சி, துக்கம், ஆதங்கம், கோபம், ஆற்றாமை, ஏமாற்றம், இன்னும் என்னென்ன என்று இனம் பிரிக்கவோ இயலவில்லை. அவர் என் வாழ்வில், என் மனதில் பதித்திருக்கும் தடம் அத்தனை ஆழமானது.

அவரை முதன் முதலில் நான் கண்ட போது எனக்கு 7 வயதிருக்கும். தலைவர் பிரபாகரன் மாமா மதுரையில் தங்கியிருந்த போது அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர் பின்னே மற்றுமொரு வரும் வருவார். ஆனால் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நிற்பார். பின்னர் தலைவர் மாமா கிளம்பும் போது அவரும் பின்னேயே செல்வார். அவரை நான் கவனிக்கும் சூழல் ஏற்பட்டதில்லை.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 7 (தோல்வி அல்ல தொய்வு)

 

மீண்டும் என் அலைவரிசைக்கே என் மனம் வந்தது. விரைவாக விசாரணை செய்துவிட்டு இன்றைக்கு விட்டு விடுவான் நாளைக்கு விட்டு விடுவான் என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் போன முதல் மாதத்தில் ஒரு விசாரணை செய்த பிறகு மீண்டும் 2010 மார்கழி மாதம் தான் இரண்டாவது விசாரணை செய்தார்கள். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏன் எங்களை வைத்திருக்கிறான் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறான் என்று நினைத்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை. மூளை மரத்துபோனதுபோலதான் இருந்தது.

Saturday, January 7, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 5

 

‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை