வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, January 6, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-3

 

டத்தப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரேலியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவைக்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தையின் பிரிவுத் துயர் சுமந்த தாய்மையின்  சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன.

Thursday, January 5, 2012

சிந்தித்து செயல்படுங்கள்

வணக்கம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ...உறவுகளே தற்போது சமீபமாக தேசிய மக்கள் தொலைகாட்சி என்று அழைக்கப்படும் ( GTV   ) பற்றிய சில செய்திகள்  வெளிவந்த வண்ணம் இருக்கின்றது ...இது பற்றி உங்களுடன் சிலவற்றை பகிர்ந்து கொல்லாம் என்று நினைக்கிறேன் ...இந்த தொலைகாட்சியில் நிருவனத்தொடன் நெருங்கி பழகியவர் என்று வெங்கடேஷ் என்பவரை அதிர்வு இணையதளம்

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)

 

மக்கள் நிறைய வந்துகொண்டே இருந்ததால் மலசலகூடப் பிரச்சனை அடுத்த பிரச்சனை ஆயிடுச்சு. அவ்வளவு பேரும் எங்கதான் போறது. நாங்கள் ஓர் இடத்தில கொஞ்சப்பேர் தங்கியிருந்தோம். பதினைந்து குடும்பங்கள் வரை இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்காக ஒரு ரென்ற் அமைத்து அதில் சின்ன பிள்ளைகளை தூங்க வைத்தோம். நாங்கள் வெளியில்தான் படுத்துக்கொண்டோம்.
ஆண்கள் எப்படியோ ஒரு மறைவைத்தேடி மலசலம் கழித்து வந்துவிடுவோம்

Wednesday, January 4, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் பிணவாடையில் கரைந்துபோன காற்று – 5

 

அனுபவங்களே மனிதர்களின் பெற்றோராக, உற்றாராக, மற்றோராக, நல் ஆசானாக மாறிப்போவதை துயரங்களே உறுதி செய்கின்றன. காணுகின்ற காட்சிகள் அனைத்தும் ஒலியோடு பேசும் பட்சிகள் பலவும் சருகுகளின் சலசலப்புக்கும் சங்கடங்களின் முணுமுணுப்புக்களுக்கும் கூட அனுபவமாகி விடுகின்றது. போக்கிடமற்ற பொழுதுகளில் சோகத்தில் சோர்வுற்று, துயரங்களில் தோய்தெடுத்த முகமாக என்முன்னே வந்தமர்ந்தார் முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்.

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-2


து ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.

Tuesday, January 3, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 4

 


ல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் யாருக்கும் யாரும் துணையில்லை-4


இன்னொரு இடத்தில் நாங்கள் கண்ணார பார்த்த கொடுமை. ஒரு தாய் அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக்கொண்டிருக்கின்றாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கின்றது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்த தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது.

Monday, January 2, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-1

 

யிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?
இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.
மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!
இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

பிரான்ஸ் பார்த்து வெட்கப்பட வேண்டிய இந்தியாவும் மங்கிப்போன உணர்வுகளுடன் தமிழக மக்களும்


 எமது அடையாளங்களை  முத்திரைகளாக வெளியிட்ட  பிரான்ஸ் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியது தமிழர்கள் கடமை... நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..சாவதற்காக யாரும் வாழ்வதில்லை ...எமது நிலைமையும் அப்படித்தான் நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..அனால் எமது வாழ்க்கையை சீரழித்து எம்மை சாகடிக்கிறான் எதிரி ..நாம் அவனிடமும் எமது வாழ்வியலை காக்கவும் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறோம்.எமது போராட்டம் அறபோராட்டம் அகிம்சை போராட்டம் கடைசியில் ஆயுத

Sunday, January 1, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 3

 


ந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.
வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3


தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்
ltte
குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை வேட்கையையும் வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.
அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்?

தலைவர் பிரபாகரன் தொடர் 2


ந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2

 

வெட்கத்தையும் பரிகசித்தார்கள் எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும் ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக் காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும் ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.
வெட்கத்தையும் பரிகசித்தவர்களின் பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம்

ஈழகாவியம் - 09


புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:11 நிகழ்காலம்.
இந்தப் பொழுதின் மாவீரர் நாள்
கார்த்திகை மைந்தர் வணக்கம்!
(அறுசீர் விருத்தம்)

கார்த்திகைக் காலம் இந்நாள்!
கதையொடும் சிதைகள் நின்று

Saturday, December 31, 2011

தலைவர் பிரபாகரன் தொடர் 1

கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன்.

`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?’ என்று இன்பம் கேட்டார்.
“கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.

ஈழகாவியம் - 08


முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!

பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்
மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!

Friday, December 30, 2011

வலி தந்த (2009 ) வெறுமையாய் கடந்த (2010-2011 ) வரப்போகும் (2012 )

அன்பான பாசத்துக்கு உரிய தமிழ்   மக்களே ..  நாம்
இப்போது புதிய ஆண்டில் பயணிக்க இருக்கிறோம் ..நாம் இதுவரை பயணித்த ஆண்டுகளை விட இனி நாம் பயணிக்க இருக்கு ஆண்டுதான் பல சவால்கள் நிறைந்த  ஆண்டாகவும் ..பல சோதனைகள் நிறைந்த ஆண்டாகவும்   பல இருள் சூழ்ந்த நாட்களாகவும் பல கசப்பான சம்பவங்களையும் காணப்போகும் ஆண்டாகவே அமையம் ...இதற்க்கு முன்பு அதாவது (2012 ) முன்னரான காலப்பகுது மிகுந்த அழிவுகளையும் மிகுந்த

Thursday, December 29, 2011

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1


முதல்முறை வந்தது வசந்தம் namikkaiசுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள் இளைஞர்கள்.
“எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள் இளைஞர்கள்.

ஈழகாவியம் - 07


அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)

கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்

என்னவிலை கொடுத்தேனும் ஈழ மண்ணை காப்போம்..குறும்படம்

என்னவிலை கொடுத்தேனும் ஈழ மண்ணை காப்போம் காத்தோம் காத்துக்கொண்டே இருப்போம் ..வீர வரலாறு படைத்த வீர மங்கைகளின் வீர வரலாற்றை சொல்லும் விலை குறும்படம்...> கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்வியலை பசியோடு தொடரும் சிறுவர்களின் தவிப்பு ..பசி குறும்படம்>>> ஒவ்வொரு தமிழனின் தவிப்பும் ...விடுதலை  வீரர்களின் தவிப்பும் ...எமது மக்கள் சுகந்திரமாக வாழ வேண்டும் என்பது ...அதற்காக உயிரை கொடுக்கவும் எதிரி உயிரை எடுக்கவும் ...துணிந்த மறவர்கள் ..எதிரியை அளிக்க  தவியாய் தவிக்கும் ..தவிப்பு குறும்படம்
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை